சீறினார் மகிந்த, அடங்கியது ஆணைக்குழு, விசாரணை நடவடிக்கை ஒத்திவைப்பு
உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டமைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இவ் எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவின் மஹிந்த தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் ஆணைக்கழுவின் விசாரணை நடவடிக்கைளும் 30 நிமிடங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ச பாரிய குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று ஆஜராகியிருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விளம்பரங்களுக்கான கட்டணம் செலுத்தப்படாமை தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment