Header Ads



கருணாவை பாதுகாக்க, மௌலானா நாடகம் போடுகிறாரா..?

-ஜஹங்கீர்-

தற்போது பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அவரைக் கைது செய்ய பொலிசார் கடந்த சில தினங்களாக முயன்ற போதிலும் பிள்ளையான் தனது இருப்பிடத்தை மாற்றி, பின்னர் சட்டத்தரணி ஊடாக நேற்று தனது வாக்கு மூலத்தை வழங்க கொழும்புக்குச் சென்ற இடத்தில் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இவர் கைது செய்யப்பட இருக்கின்ற விடயம் அவருக்கு முன்கூட்டியே  தெரிய வந்ததால் அவர் ஓரிரு தினங்கள் தலைமறைவாக இருக்க முடிந்தது.

அவரது கட்சிக்காரர்கள் ஊடகவியலாளர்களுக்குக் கூட்டம் போட்டு பிள்ளையான் கைதுக்கும் பரராசசிங்கத்தின் கொலைக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று கூறினாலும், பொலிஸ் அந்த விவகாரத்துக்காகத்தான் அவர் கைதாகி இருக்கின்றார்-விசாரிக்கப்படுகின்றார் என்று உறுதிப்படுத்தி இருக்கின்றது.

இந்த பிள்ளையான் கைதைத் தொடர்ந்து கருணாவுக்கும் ஆபத்து என்பது இன்று எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு விடயம். கருணாவும் பிள்ளையானும் கடந்த கால சட்டவிரோத நடவடிக்கைகளில் இரட்டைகள் என்று பரவலாக பேசப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் கருணாவுக்கும் ஆபத்து என்று காரணத்தால், இப்போது கருணாவை சிங்கள இனத்தின் நண்பன் அல்லது புலிகளைத் தோற்கடிக்க உதவியவர் என்று பகிரங்கப்படுத்தி, அவர் மீதான குற்றச்சாட்டுக்களை மென்மைப்படுத்த அல்லது விடுவித்துக் கொள்ள எடுக்கப்படுகின்ற ஒரு முயற்சியிலேயே தற்போது அலிசஹிர் மௌலானா இறங்கி இருக்கின்றார்!

சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களில், தான் கருணாவை அன்று கொழும்புக்கு அழைத்து வருகின்ற போது, புலிகளின் முக்கிய வரைபடங்களை ஒரு பெட்டி நிறைய அவர் எடுத்து வந்தார் என்று கூறி இருந்தார். அப்படியென்றால் இந்த வரைபடங்கள் இறுதி யுத்தத்திற்கு அரசதரப்பு படைகளுக்கு உதவி இருக்கும் - உதவி இருக்க வேண்டும் இதனைத்தான் மௌலான இன்று சந்தைப்படுதத் முனையும் முக்கிய செய்தி- விவகாரம்!

ஆனால் இதே கருணா சில தினங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் ஒரு மாவீரன்தான் அதில் எனக்கு முரண்பாடுகள் கிடையாது. அவர் ஒருபோதும் அரச படைகளின் கரங்களினால் கொல்லப்படவில்லை. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று புதுக்கதை சொல்லி சர்ச்சை கிளப்பியதுடன், அதற்கு தனது யுத்த ரீதியிலான தர்க்கங்களையும், நுட்பங்களை மற்றுமன்றி  பிரபாகரனின் தனிப்பட்ட இரகசியங்கள் பற்றியும் அந்த தொலைக் கட்சி நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தி இருந்தார்.

இது இராணுவத் தரப்புக்கு நெருக்கடியைக் கொடுத்த ஒரு விவகாரமகவும் இருந்தது. பீல்ட் மார்சல் சரத் பொன்சேக்க  கூட  கருணாவின் இந்தக் கூற்றை நிராகரித்திருந்தார். பல இராணுவ அதிகாரிகளும் இதே நிலைப்பாட்டில் இருந்தனர்.

அந்த தொலைக் காட்சி நிழச்சியில் தான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரபாகரனையோ, விடுதலைப் புலிகளையோ, அல்லது  தனது இனத்தையோ காட்டிக் கொடுக்கவில்லை என்று வலிறுதித்திக் கூறியதுடன், என்றாலும் தன்னை ஒரு துரோகியாகவே மக்கள் பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனவே கருணாவின் அண்மைய அந்தக் கருத்துப்படி இப்படி வரைபடங்களை அவர் எடுத்துக் கொண்டு கொழும்புக்கு வந்தார் என்ற கதை ஏற்றுக் கொள்ள முடியாது! ஆனால் மௌலான கூறுகின்ற கதை அதற்கு மாற்றமாக - முரணாக இருக்கின்றது. அப்படியானால் இப்படி மௌலான பேசுவது ஏன்?
மௌலான கருணாவை அன்று கொழும்புக்கு அழைத்து வந்து காப்பற்றியது போல் இந்த நெருக்கடியான நிலையிலும் கருணாவைக் காப்பாற்ற அவர் முனைவது எங்களுக்குப்புரின்றது.
இது தேச நலன் கலந்த பாற்று என்பதை விட உறவு முறையான பாசமாகத்தான் இருக்க முடியும். கருணாவை காப்பாற்ற கதை திரிக்கின்ற விடயத்தில் அவர் எதை வேண்டுமானாலும் செல்லி விட்டுப் போகட்டும்.

எல்லாக் கட்சிகளுக்கும் தாவிப்போய் இன்று மரத்தில் ஏறி இருக்கின்ற மௌலான மு.கா.வுக்குத் தாவியது ஏன் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான்.!

இது சமூகம், கொள்கை.! கோட்பாடு...! சம்பந்தமானதா என்பதை சமூகம்தான் முடிவு செய்ய வேண்டும்!

அஷ்ரஃப் காலத்து மெலானவை என்ன கிழக்கு முஸ்லிம் மக்கள் மறந்த இருப்பார்கள்.? தாவலை அவரது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்று விட்டுவிட்டாலும். குறிப்பாக கிழக்கில் நடந்து முஸ்லிம் மக்களின் படுகொலைகள்..!

பிரேமதாச காலத்தில் நடந்த முஸ்லிம் பொலிசர்களின் படுகொலைகள் என்ற குற்றச்சாட்டில் இந்த கருணாவுக்கு எந்தப் பங்கும் கிடையாது என்று அதற்கும் ஒரு வரைபடம் போட்டு மௌலான முஸ்லிம்களுக்குக் காட்டினாலும் காட்டுவார்! இது விடயத்தில் மு.கா. போராளிகள்தான் மௌலான கதைக்கு பொருள் கண்டறிய வேண்டும்.!    



3 comments:

  1. பொய்களுக்கு எத்தனை ஒப்பனை செய்தாலும் அவை உண்மைகளாகிவிடாது. உண்மைகளை எப்படி மறைத்தாலும் அவை பெண்ணின் கர்ப்பம் போல காலம் கடந்தேனும் வெளியே தெரிய வந்துவிடும்

    ReplyDelete
  2. This is the useless post. Publish the writer name

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete

Powered by Blogger.