முஹர்ரம் வாழ்த்துச் செய்திகள்...!
பிறக்கும் இஸ்லாமிய புத்தாண்டில் முஸ்லிம்கள் அனுபவித்து வரும் துன்ப, துயரங்கள் அகன்று ஒற்றுமையும், சமாதானமும் நிலவுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஹக்கீம் வெளியிட்டுள்ள இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இஸ்லாமிய புத்தாண்டு ஹிஜ்ரி 1437 ஆரம்பிக்கும் இச்சந்தர்ப்பத்தில் அதன் வரலாற்று முக்கியத்துவத்தை நாம் சரிவர புரிந்து கொண்டு செயல்படுவது அவசியமாகும்.
இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக புனித மக்காவில் இறை நிராகரிப்பாளர்கள் தொல்லைகளை கொடுத்த போது நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களும் சஹாபாக்களும் புனித மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் சென்ற சம்பவத்தோடு இஸ்லாமிய புத்தாண்டு கணிப்பு ஆரம்பித்தது. அதன் அடிப்படையில் முஸ்லிம்கள் முஹர்ரம் மாதத்தை முதலாவதாகக் கொண்டு இஸ்லாமிய புதுவருடத்தை கொண்டாடுகின்றனர்.
நபிகள் நாயகத்தின் அருமை பேரர் இமாம் ஹுசைன் (ரழி) அவர்கள் கர்பலா களத்தில் அநீதிக்கு எதிராகப் போராடி உயிர் நீத்ததையும் இஸ்லாமிய புத்தாண்டு உணர்த்தி நிற்கின்றது.
இறுதி மாதமான துல்ஹஜ் தியாகத்தின் வலிமையை வலியுறுத்தி விட்டு மறைய, முதல் மாதமான முஹர்ரமும் தியாகத்தின் சிறப்பை உணர்த்தியவாரே உதிக்கின்றது.
தற்கால உலகில் சிரியா, பலஸ்தினம் உட்பட பல்வேறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், சிறுபான்மையாகவும் வாழும் நாடுகளில் நீதியும், நியாயமும் நிலை நாட்டப்பட வேண்டும்.
இலங்கையிலும் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளை முறியடிப்பதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
நாட்டில் சகல இனத்தவர் மத்தியிலும் நல்லிணக்கமும், ஒற்றுமையும் நிலவ எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக.
இவ்வாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் அல்ஹாஜ் M H ஹலீம் அவர்களின் முஹர்ரம் வாழ்த்து செய்தி.

இஸ்லாமிய வருடத்தின் 1437ம் புது வருடம் உதயமாகும் முதல் மாதம் முஹர்ரம் என்ற இந்த மாதமாகும் . இந்த சிறப்பான மாதத்தில் எல்லாம் அல்லாஹ்வின் மிகப்பெரும் பேரருளால் ஸஹாபா பெருமக்கள் (ரலி) சத்திய இஸ்லாத்தின் நெறியை கட்டிக்காப்பதற்கு தியாகங்கள் பல செய்து ஹிஜ்ரத் பயணம் மேற்கொண்டு 1436 வருடங்கள் சென்றுவிட்டது.1437-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நாம் நமது மார்க்கத்தை நாமும் தூய்மையான வழியில் பின்பற்றி பிறமத மக்களுக்கும் எங்கள் மார்க்கத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக்கொள்ளவும், நமது பாதையில் மார்க்கத்திற்கு முரணான காரியங்களை எதிர்கொள்ளவும் தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொள்ளவும் இத்தருணத்தை ஏற்படுத்திக்கொள்வோம்.
பிறமத மக்களுடன் புரிந்துணர்வுடனும் மத நல்லிணக்கத்துடனும் வாழ பழகிக்கொண்டிருக்கும் நாம் அதே வேளை முஸ்லிம் நாடுகளில் தற்போது ஏற்பட்டிருக்கும் அனர்த்தங்களும் வெளிஉலக சூழ்ச்சிகளின் காரணமாக குன்றி வரும் சகோதரத்துவமும் புரிந்துணர்வும் இல்லாததையிட்டு கவலை கொண்டுள்ளோம்.
முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த இறை தூதரான மூஸா (அலை) அவர்களால் பிரவுன் என்ற கொடுங்கோல் ஆட்சியாளனை கடலில் அல்லாஹ் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களைவெற்றி பெற செய்த நாள் இந்த மாதத்தில் தான் என யூதர்கள் நோன்பு நோற்றதை அறிந்த ரசூலுல்லாஹ் (ஸல்) உங்களைவிட மூஸா (அலை) அவர்கள் விடயத்தில் நான் மிக தகுதியுடையவர் எனக்கூறி தானும் அந்த நோன்பை நோற்று அந்த நோன்பை நோற்கும்படி தன் தோழர்களுக்கும்) ஏவினார்கள். . இதே போல் விஷமிகளின் சூழ்ச்சிகளை விட்டும் நம் நாட்டு மக்களுக்கு அல்லாஹ்வின் பாதுகாப்பை தேடுவதோடு மட்டுமல்லாமல் உலக முஸ்லிம் நாடுகளின் சகோதரத்துவ மனப்பான்மையை வளர்த்து ஒற்றுமையுடம் போராட வழிவகுக்க இறைவனை ரசூலுல்லாஹ் அறிவித்த நாற்களில் நோன்பு நோற்று பிரார்த்திப்போம்.
Masha Allah. Beutyful
ReplyDeleteஇப்ப புதுசாக ஒர் வாழ்த்து.. செய்தி வெளிவரூுகிறது இஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் இது அரசியல்வாதிகளுக்கு செரி ஆனால் முஸ்லிம்களுக்கு செரிப்பட்டு வராது.
ReplyDelete