Header Ads



இஸ்ரேலின் அக்கிரமம் தொடருகிறது

கத்திக்குத்து தாக்குதலுக்கு முயன்ற குற்றச்சாட்டில் மற்றுமொரு பலஸ்தீன இளைஞன் கிழக்கு ஜரூசலத்தில் வைத்து இஸ்ரேலிய எல்லை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தேக நபர் அதிகாரிகளுக்கு எதிராக கத்தியை உருவியதை அடுத்து சம்பவ இடத்தில் சுட்டுக் கொல்லப்பட் டார் என்று இஸ்ரேல் பொலிஸ் பேச்சாளர் மிக்கி ரொசன்பீல்;ட் குறிப்பிட்டுள் ளார்.

புனித அல் அக்ஸா பள்ளிவாசல் லயன் கேட்டை ஒட்டியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வாயில் மூடப்பட்டதைத் தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய செய்தித் தளமான டைம்ஸ் ஒப் இஸ்ரேல் சம்பவம் குறித்து விபரிக்கும்போது, எல்லை பொலிஸார் பலஸ்தீன இளைஞன் மீது சந்தேகம் கொண்டு அவரது காற்சட்டை பையில் இருந்து கையை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

அப்போது பலஸ்தீன இளைஞன் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்ததாகவும் பொலி ஸார் தமது பாதுகாப்பு கவசத்தை கொண்டு காத் துக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்திலேயே பலஸ்தீன இளைஞன் மீது இஸ்ரேல் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத் தியதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

எனினும் பலஸ்தீன இளைஞன் கத்திக் குத்து தாக்குதல் நடத்த முயற்சிக்காத நிலையிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக சம்பவத்தை பார்த்த பலஸ்தீனர் ஒருவர் பலஸ்தீனின் மஅன் செய் திச் சேவைக்கு விபரித்துள்ளார்.

குறித்த பகுதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போதே அந்த இளைஞன் சுடப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.

இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டவர் முதபா அதல் அல்-காதிப் என அடையாளம் காணப் பட்டுள்ளார். இந்த கொலையுடன் ஒக்டோபர் ஆரம் பம் தொடக்கம் கொல்லப்பட்டிருக்கும் பலஸ்தீனர் களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்;துள்ளது.

ரமல்லாஹ்வில் அல் பைராஹ் பகுதியில் இடம் பெற்ற மோதலின்போது கடந்த ஞாயிறன்று இஸ் ரேல் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 வயது அஹமத் 'ரகா என்ற பலஸ்தீன சிறுவன் கொல் லப்பட்டான். இதன்படி குறித்த காலத்திற்குள் இஸ் ரேல் படையினரால் கொல்லப்படும் மூன்றாவது 13 வயது சிறுவன் இவனாவான்.

இம்மாத ஆரம்பம் தொடக்கம் இஸ்ரேல் படையினர் 1,300க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் மீது துப்பாக்கிச் சூடு மற்றும் ரப்பர் குண்டு தாக்குதல்களை நடத்தி இருப்பதாக பலஸ்தீன அதிகார சபையின் சுகாதார அமைச்சு ஞாயிறன்று குறிப்பிட்டிருந்தது.

ஒக்டோபர் ஆரம்பத்தில் நான்கு இஸ்ரேலியர் பலஸ்தீனர்களின் தாக்குதல்களில் கொல்லப்பட்டி ருந்தனர். அதேபோன்று ஒக்டோ பர் அரம்பமானது தொடக்கம் இஸ்ரேல் படையினர் மற்றும் குடியேற்றக்காரர்களுடனான பல ஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களின் மோதல் தணியாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதில் கடந்த ஞாயிறன்றும் ஆக்கிரமிப்பு மேற்குக் கரை மற்றும் கிழக்கு nஜரூசலத்தில் கடுமையான மோதல் நீடித்தது. எனினும் கடந்த மாத இறுதியில் ய+தர்களின் மத விடுமுறையை ஒட்டி முஸ்லிம்ளின் மூன்றாவது புனிதத் தலமான அல் அக்ஸா பள்ளி வாசலில் இஸ்ரேல் நிர்வாகம் பலஸ்தீனர்களுக்கு கெடுபிடிகளை அதிகரித்ததை அடுத்தே பதற்றம் தீவிரம் அடைந்தது.

இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பலஸ்தீன பகுதிகள் அபாய சூழலில் இருப்பதாக பலஸ்தீன மனித உரிமைக் குழுவான அல் ஹக் கடந்த சனியன்று எச்சரிக்கை விடுத்திருந்தார். பலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் படையினர் ஒழுங்குமுறையற்ற அதிகப்படியாக பலப்பிரயோகத்தை பயன்படுத்துவ தாக அந்த குழு சுட்டிக்காட்டியது.

1 comment:

  1. இன்னாலில்லாகி வயின்ன இலைகி ராஜியூன் அல்லாh வாக்களித்த வெற்றியை நிச்சமாக முஸ்லிம்களுக்கு வழங்குவான்

    ReplyDelete

Powered by Blogger.