டுபாயில் இலங்கை அரசியல் குடும்பத்தினருக்கு சொந்தமான 8 வங்கிக் கணக்குகள் - அமைச்சர் ராஜித தெரிவிப்பு
மத்திய கிழக்கு நாடான டுபாய் நாட்டில் உள்ள வங்கி ஒன்றில் இருக்கும் அரசியல் குடும்பத்தினருக்கு சொந்தமான 8 வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஒரு வங்கிக் கணக்கில் 109 கோடி அமெரிக்க டொலர்கள் அதாவது 15 ஆயிரத்து 45 கோடி ரூபாவும் மற்றுமொரு வங்கிக்கணக்கில் 180 கோடி டொலர்கள் அதாவது 24 ஆயிரத்து 840 கோடி ரூபாவும் இன்னுமொரு வங்கிக்கணக்கில் 50 கோடி டொலர்கள் அதாவது 6 ஆயிரத்து 900 கோடி ரூபாவும் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விசேட விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாடொன்றின் வங்கியில் வைப்புச் செய்யப்பட்டிருந்த அரசியல் குடும்பத்தை சேர்ந்த மகன் ஒருவருக்கு சொந்தமான 650 மில்லியன் டொலர்களில் 500 மில்லியன் டொலர்கள் கிழக்கு ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு மாற்றப்பட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment