Header Ads



8687 என்ற இலக்கத்தை கொண்ட ஜீப் வண்டிக்கு, 3 அமைச்சர்கள் உரிமை கோரல்

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் கைவிடப்பட்டிருந்த அதிசொகுசு ஜீப் வண்டிக்கு மூன்று அமைச்சுக்கள் பொறுப்பு கூறிவருகின்றன.

இந்த நிலையில், அதன் உண்மையான உரிமையாளரை கண்டறிவதற்காக வாகனத்தின் பதிவு ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிட்டிய மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

உரிமையாளரை உறுதிப்படுத்த முடியாத நிலையில் எச்.எச்.8687 என்ற இலக்கத் தகடை கொண்ட டோயோட்டா லேன்ட் குரூஷர் ரக ஜீப் வண்டி, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டப வளாகத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக,

பொலிஸ் சோதனைச் சாவடியின் பொறுப்பதிகாரி, கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, கைவிடப்பட்டிருந்த அதிசொகுசு ஜீப் வண்டி கறுவாத்தோட்ட பொலிஸாரின் பொறுப்புக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த ஜீப் வண்டி தமக்கு சொந்தமானவை என மூன்று அமைச்சுக்கள் எழுத்துமூலம் கோரியுள்ளமையினால், ஜீப் வண்டியை உரிமையாளருக்கு வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.