மஹிந்தவிடம் 7 மணிநேரம் விசாரணை - காலை மாலை தேனீரும், மதிய போசனமும் வழங்கப்பட்டது
முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஸவிடம், பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, இன்று விசாரணை மேற்கொண்டது.
சுமார் 7 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்காக செய்யப்பட்ட விளம்பரங்களுக்காக சுயாதீன தொலைகாட்சிக்கு நிதி வழங்காமை தொடர்பிலேயே அவரிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் தொடர்பில், இன்று அவரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டதுடன், நாளைய தினமும் அவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஊடகதுறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவும் இன்று, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரசன்னமானார்.
அத்துடன், சுயாதீன தொலைகாட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் பொது முகாமையாளர் ஆகியோரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னால் பிரசன்னமாகியிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, உதய கம்மன்பில, பிரசன்ன ரணவீர மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான உதித லொக்கு பண்டார மற்றும் ஏ எச் எம் அஸ்வர் ஆகியோரும் ஆணைக்குழுற்கு சமூகமளித்திருந்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு, பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, இன்று காலை மற்றும் மாலை தேனீருடன் மதிய போசனத்தை வழங்கியதாகவும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்
காலை மாலை தேநீரும், மதிய போசனமும் வளங்கப்பட்டது.... நக்கல்!
ReplyDeleteஇட்லி சாம்பாறு நல்லது
ReplyDeleteஇன்று வெள்ளிக்கிழமை மருதானையில சம்மாந்துறை சாப்பாட்டுக்கடை புரியாணி நல்லா இருக்கும் சோ அத இன்டாக்கி வாங்கி கூடுங்க
ReplyDelete