தினமும் 650 பெண்கள் தமது கருவை கலைக்கின்றனர், 77 வீதமானவர்கள் எதிர்பாராத விதமாக கருத்தரிப்பு
இலங்கைப் பெண்களில் 77 வீதமானவர்கள் எதிர்பாராத விதமாக கருத்தரிப்பதாக சுகாதார அமைச்சின் குடும்ப நலப் பிரிவு மருத்துவர் சஞ்சீவ கொடகந்த தெரிவித்துள்ளார்.
குடும்ப திட்ட அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று (26) பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்பாராதவிதமாக கருத்தரிப்பதனால் சிசுக் கொலைகள், சிசுக்களை கைவிட்டுச் செல்லுதல், பராமரிக்க முடியாமை, கருக்கலைப்பு போன்ற சம்பவங்கள் அதிகளவில் இடம்பெறுகின்றன.
நாட்டில் நாள் ஒன்றுக்கு 650 பெண்கள் தங்களது கருவை கலைக்கின்றனர். குடும்பத் திட்ட வழிமுறைகளை பின்பற்றாமை இதற்கான பிரதான காரணமாகும்.
நாட்டின் பெரும்பான்மையான பெண்கள் இரண்டு குழந்தைகளையே விரும்புகின்றனர்.
இதனை விடவும் கூடுதலான எண்ணிக்கையில் குழந்தைகள் இருந்தால் அது எதிர்பாராத விதமாக பிறந்த குழந்தை அல்லது குழந்தைகளாகவே 92 வீதமான சந்தர்ப்பங்களில் காணப்படுகின்றது.
குடும்பத் திட்டம் தொடர்பிலான மூட நம்பிக்கை மற்றும் போதியளவு தெளிவின்மையினால் எதிர்பாராத விதமான கருதரித்தல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
பாலியல் கல்வி முறையான விதத்தில் வழங்கப்பட்டால் இந்தப் பிரச்சினையை இலகுவாக தீர்க்கலாம்.
ReplyDeletePaaliyal kalvi um oru olukka seerkaydu .iyatkaikku muran .
ReplyDeleteMujeeb, பாலியல் கல்வி இயற்கைக்கு முரண்? பாலியல் கல்வி இயற்கைக்கு முரண் என்றால், நீங்கள்/ உங்கள் குடும்பத்தினர் மகப்பேறுக்கு செல்லும் வைத்தியர்கள் எதை படித்துவிட்டு வந்து வைத்தியம் பார்க்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்கள்?
ReplyDeleteஎதோ மந்திரம் ஜெபித்துவிட்டு வருகின்றார்கள் என்றா நினைக்கின்றீர்கள்?