Header Ads



இலங்கை இளம் அரசியல்வாதியின் 637 மில்லியன், வெளிநாட்டு கணக்கை இடைநிறுத்துவதை டுபாய் நிராகரித்தது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சிய வங்கியில் இந்நாட்டின் முன்னாள் முக்கிய தலைவரின் மகனின் பெயரில் உள்ள 637 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்துடனான கணக்கினை இடைநீக்குமாறு இலங்கை வழக்கறிஞர் முன்வைத்த கோரிக்கை அந் நாட்டு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கையில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்படாமையினாலும், அவ் வழக்கு தொடர்பில் ஒரு தரப்பினரிடம் மாத்திரம் விசாரணை மேற்கொள்வது தகுதியில்லை என கூறி இலங்கை வழக்கறிஞரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த முன்னாள் தலைவரின் மகனுக்கு அந் நட்டில் கண்க்கு உள்ளதா, இல்லையா என்பது தொடர்பிலும் அவர்கள் தகவல் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது.

1 comment:

  1. எங்கள் நாட்டின் மக்கள் பணம்

    ReplyDelete

Powered by Blogger.