Header Ads



"லண்டனில் ராஜபக்ச குடும்பத்தின் 3.88 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள்...?"

ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான 3.88 பில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் வைப்பு செய்யப்பட்டுள்ள வங்கி கணக்கு தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகியுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரின் ஊடாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜபக்ச குடும்பத்தின் டுபாய் வங்கி கணக்கு தொடர்பில் பரவும் கதைகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று கேள்வியெழுப்பிய சந்தர்ப்பத்தில் அவர் இதனை வெளியிட்டுள்ளார்.

லண்டன் வங்கி கணக்கு மற்றும் ஏனைய தகவல்களை தற்போது வெளியிடமுடியாதென கூறிய அவர் வங்கி கணக்கு தொடர்பில் மேலதிக விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வங்கி கணக்கு போலியானதென வெளியாகும் ஊடக அறிக்கைகளை அவர் நிராகரித்துள்ளார்.

இந்த பணம் டுபாய் வங்கிக்கு கிடைத்த முறை தொடர்பிலும், பின்னர் வேறு நாட்டின் பல வங்கிகளுக்கு மாற்றி அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலும், இதற்கு தொடர்புடைய ஏனைய தரப்பினர் தொடர்பிலும் தற்போது தகவல் வெளியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அந்த விசாரணை நடவடிக்கைகளில் ஏற்பட்ட தவறு காரணமாக அந்த பணத்தை மீண்டும் இந்த நாட்டிற்கு கைப்பற்றிக்கொள்ளும் நடவடிக்கைகள் தாமதமாவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்து கணக்கின் உரிமையாளர்களுக்கு இடையில் ராஜபக்ச குடும்பத்தின் இரண்டு மகன்மார்களும், முன்னாள் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமான உறுப்பினர் ஒருவர் மற்றும் மேலும் வர்த்தகர்கள் இருவரும் உள்ளடக்கப்படுவார்கள்.

விசேடமாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக இந்த நாட்டினுள் நிதி மோசடி குற்றம் சுமத்தப்பட்டு நீதி விவகாரங்கள் மேற்கொள்ளப்படாத நிலைமையினுள் வெளிநாட்டு அரசாங்கங்களின் ஆதரவை பெற்றுகொள்வது இக்கட்டான நிலைமையாக உள்ளதாகவும், இந்த காரணம் காரணமாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகளை உடனடியாக விசாரணை மேற்கொண்டு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.