மரண தண்டனைக் கைதியின், நாளாந்த ஹெரோயின் செலவு 30.000 ரூபா - தாயார் ஏற்பாடு
மரணதண்டனை பெற்று வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞன் ஒருவர் நாளாந்தம் ஹெரோயினுக்கு 30 ஆயிரம் ரூபா செலவிட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் அதன்பின் மஹர சிறைக்கு மாற்றப்பட்டார்.
சிறிது காலத்தின் பின் மீண்டும் வெலிக்கடைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து குருவிட்ட சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
பெரும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த இந்த வாலிபருக்கு வெளிநாட்டு யுவதியொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தண்டனை விதிக்கப்பட்டது.
மரணதண்டனைக் கைதிகள் பற்றிய ஆய்வொன்றை நடத்தி வரும் ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் குற்றவியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க வெளியிட்ட ஆய்வறிக்கையொன்றிலேயே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கைதிக்கு நாளாந்தம் ஹெரோயின் வாங்குவதற்கான பணத்தை அவரது தாயே ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரியவருகிறது.
Post a Comment