Header Ads



பொத்துவில் காணி பிரச்சினைகளுக்கு 2 வாரங்களிற்குள் தீர்வு பெற்றுத்தரவேண்டும் - பைசால்காசீம்

பொத்துவில் மக்களது  காணிப்பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடலொன்று இன்று வியாழன்  பிற்பகல்  இரண்டு மணியளவில்  பொத்துவில் பிரதேச செயலகத்தில்  ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

பிரதியமைச்சர்  பைசால் காசீம்  அவர்களது  வேண்டுகோளிற்கிணங்க  ஒழுங்குசெய்யப்பட்டிருந்த  இந்த கூட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் உட்பட மாவட்டத்தின் அனைத்து திணைக்களத்தலைவர்களும்  கலந்து  கொண்டனர்.
வேகாமம்,கனகர் கிராமம்,கரான்குவ பள்ளியாண்ட வட்ட, றத்தல்,கிரான் கோமாரி போன்ற இடங்களில் காணிகளை  இழந்து  கஷ்டப்படுகின்ற விவசாய அமைப்புகளின்  பிரதி நிதிகளும்  வருகை தந்திருந்தனர்.பிரதேச  செயலாளர்  வரவேற்புரையுடன்  ஆஐயாலப்படுத்தப் பட்ட முக்கிய பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தினார்.

விவசாயிகள் தமது  பிரச்சினைகளை  அமைச்சர் முன்னிலையில்  மாவட்ட அரசாங்க அதிபர்  அவர்களுக்கு  விளக்கமாக கூறினார்கள்.அதனைத்தொடர்ந்து வன விலங்குகள் திணைக்களம்,வன  வளங்கள் திணைக்களம்,காணிப்பயன்பாடு  திணைக்கள அதிகாரிகளிடம்   குறித்த பிரச்சனைகளின்  உண்மைத்தன்மை பற்றி கேட்டறிந்தபின் குறித்த காணிகள் சம்மந்தமாக  மாவட்ட  அரசாங்க அதிபர்  பின்வருமாறு  கருத்துத்தெரிவித்தார்.
காணிக் கச்சேரி  தேவையான இடங்களுக்கு  நடாத்துவதற்கு  ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது,இன்னும் சிலருக்கு  உத்தரவுப்பத்திரங்கள்  வழங்குவதற்கான நடவடிக்கைகளும்  எடுக்கப்பட்டுள்ளன.
கிரான் கோமாரியில் வனபரிபாலன  திணைக்களம் எல்லையிட்டு   விவசாயிகளை  விவசாயம் செய்யாமல் தடுத்த  இடங்களில்  உள்ளவர்கள் வைத்திருக்கும்  சில உத்தரவுப்பத்திரங்கள்  போலியானவை  என கண்டறியப்பட்டுள்ளன.அவ்வாறு போலியான  பத்திரங்கள் வைத்திருப்பவர்களை  விடுத்து  ஏனையோர்களுக்கு  வேறு இடங்களில் அவர்கள்  வைத்திருந்ததற்குச்சமனான காணிகள்  வழங்கப்படும். 
           ரத்தல்  பிரதேசத்தில் உள்ள காணிக்கு  பாணமையைச்சேர்ந்த  மக்களும்  உத்தரவுப்பத்திரம்  வைத்திருக்கின்றார்கள் ,அதற்குரிய வரைபடமும் இருப்பதாக அறியக்கிடைத்தது,எனவே  இரு சமூகங்கள்  சம்மந்தப்பட்டுள்ள இப்பிரச்சினையை  சுமூகமாக தீர்க்க வேண்டும். ஏற்கனவே  மானிய அடிப்படையில் பசளைகள் பெற்று வந்தவர்களின் பெயர்ப்பட்டியலின்  அடிப்படையில்  அவர்களுக்குரிய காணிகள் கிடைப்பதற்கு  நடவடிக்கை எடுப்பேன்.
மேலும் வேகாமம் சம்மந்தமாக  என்னால்  தனியே முடிவெடுக்கமுடியாது, பிரதியமைச்சர் பைசால் ,வனவிலங்குகள் திணைக்களம்,சுற்றுச்சூழல்  திணைக்களம்,வன பரிபாலன திணைக்களம் போன்றவற்றின்  தலைவர்களுடன் கொழும்பிலே  பேச்சுவார்த்தை நடாத்திய பின்னரே  முடிவெடுக்க முடியும்.அந்த கூட்டம்  நடைபெறும்வரை  தயவுசெய்து  ஒருவரும் அந்தக்காணிகளுக்குள்   விவசாய  நடவடிக்கைகளுக்காக செல்லவேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.
கனகர் கிராமம்  காணிகள் யானைகளின்  சஞ்சார பாதையாக  பயன்படுத்துவதற்காக  வனவிலங்குகள் திணைக்களத்தினால்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது,இந்த  இடத்தில்  உள்ளவர்கள்  வைத்திருக்கும் காணி உத்தரவுப்பத்திரம்  லாஹுகல  பிரதேச சபை  உருவாக்கப்பட்டதன் பின்னர்  பொத்துவில்  பிரதேச செயலகத்தினால்  வழங்கப்பட்டிருப்பது  தெரிய வருகிறது,,இக்காணியை  லாஹுகள  மக்களும்  கேட்கின்றனர்.
இருப்பினும் விவசயிகளாகிய உங்களது நன்மை கருதி  யானைகள் சஞ்சாரம் செய்யும் இடத்திற்காக  ஒதுக்கப்பட்ட காணி  போக  காணிகள் எஞ்சினால்   உண்மையான உத்தரவுப்பத்திரம்  வைத்திருப்போருக்கு  அவை பகிர்ந்தளிக்கப்படும்.
திருக்கோவில்,லாஹுகல  பிரதேச செயலகங்களின்  எல்லை ச்மந்தம்மான பிரச்சனைகளை  உரிய பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பில்  தீர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பேன்.

இதனைத்தொடர்ந்து  கருத்துத்தெரிவித்த பிரதியமைச்சர் ,பொத்துவில் காணிகளின் பிரச்சினை பற்றி பேச பல கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன,  ஆனால்  இன்றைய சந்திப்பு  கிட்டத்தட்ட அரைவாசியான  பிரச்சினைகளுக்கு தீர்வினை தந்துள்ளது.
அரசாங்க அதிபர் அவர்கள் எதிர்வரும் இரு வாரங்களினுள் இப்பிரச்சினைகளை  தீர்த்துவைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கொழும்பில் நடைபெற உள்ள சந்திப்புக்கான ஏற்பாடுகளை தான்  முன்னெடுப்பதாகவும்  உறுதியளித்தார்.
முன்னாள்  பிரதேச சபை உறுப்பினர்  ஜனாப்  ரஹீம்-(ஹில்டன் )அவர்களது  நன்றியுரையோடு  கூட்டம்  முடிவுற்றது.
   

No comments

Powered by Blogger.