Header Ads



அடுத்தடுத்து பதவியேற்ற அரசுகள், அரசியல்வாதிகள், சர்வதேச சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட வடபகுதி முஸ்லிம்கள் (பகுதி 2)

-ஆங்கிலத்தில் லத்தீப் பாரூக்
- தமிழில் நொஷாத் மொஹிடீன்-

இவ்வாறுதான் வடபகுதியிலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக டுவுவுநு இனால் வெளியேற்றப்பட்டனர். (1990 ல் இவ்வாறு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 75000 என மதிப்பிடப்பட்டுள்ளது)


முஸ்லிகளை வெளியேற்றிய பின் அவர்களது வீடுகள் மற்றும் சொத்துக்கள் மும்முரமாக டுவுவுநு உறுப்பினர்களால் சூறையாடப்பட்டன. இந்த வீடுகளிலிருந்து நிலைகள், கதவுகள், யன்னல்கள், கூரையோடுகள,; தரையோடுகள் என எல்லாமே அணுஅணுவாகப் பெயர்க்கப்பட்டன. வர்த்தக நிலையங்களுக்கும் இதே கதிதான். இவ்வாறு சூறையாடப்பட்ட பொருட்கள் டுவுவுநுன் மக்கள் கடைகள் என்ற பெயரில் நடத்தப்பட்ட விற்பனை நிலையங்களில் தமிழ் மக்களுக்கு மலிவு விலையில் விற்கப்பட்டன. அதேபோல் முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வாகனங்களும் தமிழ் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டன.

'1990 அக்டோபர் 20ல் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலிருந்து 48 மணிநேர காலக்கெடுவில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். மன்னார் தீவில் 24ம் திகதி காலையில் டுவுவுநு அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்ட முஸ்லிம்கள் 28ம் திகதிக்குள் வெளியேற வேண்டுமென அறிவிக்கப்பட்டது. இதற்கு அங்குள்ள கத்தோலிக்க மதகுருமாரும் உள்ளுர் தமிழ் மக்களும் பலத்த எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் டுவுவுநு அதனைப் பொருட்படுத்தவில்லை. 28ம் திகதியன்று எருக்கலம்பிட்டி நகரை அவர்கள் முற்றுகையிட்டு முஸ்லிம்களுடனான கொடுக்கல் வாங்கல் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தனர்'என்று 2008 ஜனவரி 7ல் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் வெளியான ஒரு கட்டுரையில் ஷாரிகா திரனகம குறிப்பிட்டுள்ளார்.

இது
LTTEன் தனிப்பட்ட முடிவுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை. இதில் சிவிலியன்கள் பங்கேற்றமைக்கான எந்த ஆதாரமும் இல்லை. இந்த இன சுத்திகரிப்பில் சாதாரண தமிழ் மக்கள் பங்கேற்கவும் இல்லை.

உண்மையிலேயே பிரபாகரனின் இந்த முடிவால் யாழ்ப்பாணத்திலுள்ள டுவுவுநு உறுப்பினர்கள் கூட அதிர்ச்சியடைந்தனர். யாழ்ப்பாணத்தின் பல இடங்களில்
LTTE உறுப்பினர்கள் அவர்களது சொந்த இடங்களிலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சில இடங்களில் முஸ்லிம்கள் வெளியேறி வரும் போது யாழ்ப்பாண LTTE உறுப்பினர்கள் சிலர் கலங்கி நின்றதையும் அவதானிக்க முடிந்ததாக சிலர் குறிப்பிட்டுள்ளனர். இந்த விடயத்தில் LTTE உறுப்பினர்கள் தலைமையின் உத்தரவை மீறி விடுவார்களோ என்ற ஒரு அச்சமும் இருந்தது.

எவ்வாறேனும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் டுவுவுநு ஆல் மிக்க கவனமாக வகுக்கப்பட்ட பாதைகள் மூலம் வெளியேறினர். அந்தப் பாதைகள் ஊடாக அவர்கள்
LTTE சோதனைச் சாவடிகள் பலவற்றை கடந்து செல்ல வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம். ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் முஸ்லிம்கன் மீண்டும் மீண்டும் சோதனையிடப்பட்டு மேலும் மேலும் சுரண்டப்பட்டனர். இவ்வாறு கிட்டத்தட்ட ஒன்றுமே இல்லாதவர்களாகத்தான் முஸ்லிம்கள் டுவுவுநு எல்லைகளைக் கடந்தனர்.

சோதனைச் சாவடிகளை அவர்கள் கடந்தபோது காணி உரிமைப் பத்திரங்கள், மின்சாரப் பாவனைப் பொருட்கள,; சைக்கிள்கள் என எல்லாமே அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டன. சுடுதண்ணீர்ப் போத்தல்கள் கூட அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டன. 1991ம் ஆண்டு மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் கப்பப்பணம் பெறுவதற்காக முஸ்லிம்கள் தடுத்து வைக்கப்பட்டமை ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. இந்த இனச் சுத்திகரிப்பு செயற்பாட்டின் மூலம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்பு 110 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கலாம் என்று ஒரு மதிப்பீடு கூறுகின்றது. முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட பொருட்களை மலிவு விலையில் விற்று
LTTE பெரும் பணம் ஈட்டியது.

மொத்தத்தில் முஸ்லிம்கள் எதுவுமே இல்லாதவர்களாக அகதி முகாம்களை வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்தில் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்த முஸ்லிம் சமூகம் ஒரே இரவில் யாசகர்களாக ஆக்கப்பட்டதுதான் வரலாறாகும்.

1990 நவம்பர் அளவில் வடபகுதியில் இருந்து அனைத்து முஸ்லிம்களும் வெளியேறி விட்டனர். வடபகுதியை ஒட்டுமொத்த தமிழர்கள் வாழும் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்ட டுவுவுநு போராட்டம் அன்று வெற்றி கண்டது. இந்த இனச்சுத்திகரிப்பானது வெறும் வெளியேற்றம் என்றே சொல்லப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அவர்களுக்கு கிடைத்த அந்தஸ்து வடபகுதி அகதி முஸ்லிம்கள் என்பதாகும். இந்த வெளியேற்றம் காரணமாக பூகோளவியல் சனத்தொகைப் பரம்பலிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டது. வடபகுதியில் வாழ்ந்த ஒரு பிரிவினர்தான் இவ்வாறு அகதிகளாக்கப்பட்டனர்.

இவர்களுள் பெரும்பாலானவர்கள் புத்தளம் மாவட்ட கற்பிட்டி மற்றும் புளிச்சாக்குளம் ஆகிய பகுதிகளுக்கும் இன்னுமொரு பிரிவினர் தில்லையடிக்கும் சென்றனர். இன்னும் சிலர் வவுனியா, நீர்கொழும்பு, மற்றும் கொழும்பு ஆகிய இடங்களுக்கும் சென்றனர். இவர்கள் எல்லோருமே மீண்டும் தமது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.


யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்களின் வாழ்வியலுக்கு இப்படித்தான் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசுகள் அனைத்தும் இதை ஒரு சர்வசாதாரண விடயமாகவே எடுத்துக் கொண்டனர். அரசசார்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச மன்னிப்புச் சபை என்பன கூட துரதிஷ்டவசமான இந்த மக்களின் நிலையை பொருட்படுத்தவில்லை. அவர்களை அகதிகளாகக் கூட மதிக்கவில்லை.

இவ்வாறு எல்லோரும் மௌனம் காத்த நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி இதை குற்றச்செயல் என கண்டித்து குரல் கொடுத்தார். கனடாவின் டொரன்டோ நகரில் 2008 ஆகஸ்ட் 23 ல் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான ஒரு ஓவியக் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனைக் கண்டித்தார்.

'தமிழர்களுக்காக போராடுவதாக கூறிக் கொள்ளும்
LTTE வடக்கிலிருந்து சகல முஸ்லிம்களையும் வெளியேற்றியுள்ளது. அவர்கள் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் வெளியேற்றப்பட்டுள்ளனர். பல தலைமுறைகளாக தமிழர்களோடு சமாதானமாக வாழ்ந்த அவர்கள் இன்று அனைத்தையும் இழந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். கடந்த 17 வருடங்களாக தெற்கில் சிங்கள் மக்களுடனும் புத்தளம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுடைய அடிப்படைத் தேவைகள் எதுவும் இன்னமும் பூர்த்தி செய்யப்படவில்லை. எமது நாட்டில் அகதி முகாம்கள் உள்ளவரை அவற்றில் சிங்களவர் தமிழர் முஸ்லிம்கள் என யாரிருந்தாலும் சரி எந்தப் பிரிவு இருந்தாலும் சரி அகதி முகாம்கள் உள்ளவரை ஜனநாயகப் பண்புகள் பற்றி எம்மால் எதுவும் பேச முடியாது. அதற்கான உரிமை எமக்குக் கிடையாது. எமது மக்களுள் ஒரு பிரிவினர் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்ற நிலையில் அவர்களின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டுள்ள நிலையில் நாம் ஜனநாயக உரிமைகள் பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை. எமது நாடு முழுமையான ஜனநாயக சுதந்திரம் உள்ள நாடு என்று கூறவும் முடியாது. ஜனநாயக , அடிப்படை மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்படுவது என்பது அடிமைத்துவத்திற்கு சமனானதாகும். இதற்கு மேலும் எமது இளைஞர்கள் அவர்கள் எந்த இனத்தை சேர்ந்தவராயினும் சரி இனிமேலும் அவர்கள் இரத்தம் சிந்த வேண்டுமா? சிறுபான்மை சமூகமும் சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான தீர்வுகள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.'என்று சங்கரி அந்தக் காலகட்டத்தில் கூறினார். இன்றும் இது பொருத்தமாகவே உள்ளது.

தமது சொந்த அரசியல்வாதிகள், சமூகம், அரசுகள் என எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட ஒரு பிரிவாக வடபகுதி முஸ்லிம்கள் கால் நூற்றாண்டுகளைக் கழித்துள்ளனர். இழந்து போன தமது வாழ்வை மீண்டும் கட்டி எழுப்ப வழியின்றி ஆனால் அதற்கான எதிப்பார்ப்புக்களுடன் அவர்கள் இன்னமும் காத்திருக்கின்றனர்.

முற்றும்.

1 comment:

  1. This is unforgetable and shameful act by the LTTE terrorist ans its supporting people too. Because the people in those area too supported this and they have stolen Muslim's property without any doubt. But they all have forgoten there is a Almighty & Supper power watching this to reply for this all shameful act...and it has done - Thank God (Alhamdulillah)

    ReplyDelete

Powered by Blogger.