வன்னியின் விடியல் குழுவின், 2 வது நிர்வாக கூட்டம்
யுத்தத்தின் பிற்பாடு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் அரச அதிகாரிகளும், ஒரு சில அரசியல்வாதிகளும்,சமூக தொண்டு நிறுவனங்களும் அசமந்த போக்குடன் இருக்கின்ற வேலையில் வன்னியில் உள்ள முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக இருக்கின்ற பிரச்சினைகளை இனம் கண்டு தீர்த்துகளையும், அபிவிருத்திகளையும் மக்களுக்கு பெற்று கொடுக்கும் நோக்குடன் வன்னியில் உள்ள சமூக ஆர்வலர்கள் ஓன்றாக சேர்ந்து உருவாக்கிய சுயாதீன அமைப்பு தான் இந்ந வன்னியின் விடியல் குழு இந்ந குழுவின் இரண்டாவது நிர்வாக கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தில்லையாடி முஜாஹிதின் அரபு கல்லூரியில் இலங்கைக்கான தலைவர் தௌபீக் (மதனி) தலைமையில் இடம்பெற இருப்பதாக தெரிவித்தார்.
இந்த ஓன்று கூடலில் பேசபட இருக்கின்ற முக்கிய பிரச்சினைகள் இலவங்குளம் இருந்து மரிச்சிகட்டி வரைக்குமான பாதையின் தற்போதய நிலை.
மன்னார் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைக்கான காரணம் மற்றும் தடையான விடயங்கள் பற்றி ஆராய்தல்
#வன்னியில் திறக்கபடாமல் உள்ள பல நோக்கு கூட்டுறவு கிளைகளின் தற்போதைய அவல நிலை
#வன்னி பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கின்ற பிரச்சினைகள்
முசலி பிரதேசத்தில் உள்ள விவசாயிகளின் நீர் பிரச்சினையும் அதற்கு தடையாக இருக்கின்ற உண்மை காரணிகளையும் இனம் கண்டு தீர்த்து வைத்தலும்.
வன்னி முஸ்லிம் மக்களின் வாக்கு பதிவுகள் தொடர்பாக உரிய அதிகாரிகளை சந்தித்தல்
வன்னியின் விடியல் குழுவின் அங்கத்தவர்கள் அணைவரும் இந்த ஒன்று கூடலில் கலந்து கொள்ளுமாறு தலைவர் மேலும் தெரிவித்தார்.
வன்னியின் விடியல் குழுவின்
ஊடக பிரிவு
Post a Comment