வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டு - முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் கருத்தரங்கு
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டு நிறைவையொட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாட்டில் கருத்தரங்கு
வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதையொட்டி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள கருத்தரங்கு இன்று (30) வெள்ளிக்கிழமை காலை 8.15 முதல் நற்பகல் 12.00 மணி வரை இலக்கம் 9, ரீட் அவனியூ (பிலிப் குணவர்தன மாவத்த), கொழும்பு 07இல் ரோயல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஹக்கீமின் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர 'வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களுக்கான அர்த்தபுஷ்டியுடனான நல்லிணக்கம் மற்றும் மீள்குடியேற்றம் என்பவற்றை உத்தரவாதப்படுத்துதல்', மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் 'அர்த்தமுள்ள மீள்குடியேற்றம் பற்றிய அரச கொள்கையும் அதன் பிரதிபலனும்'இ தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் 'நல்லிணக்கம், வடபுல முஸ்லிம்களின் மீள் வருகை மற்றும் மீள்குடியேற்றம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பார்வை' ஆகிய தலைலப்புக்களில் உரைகளை நிகழ்த்தவுள்ளனர். அத்துடன் மேலும் பல வளவாளர்களும், துறைசார் நிபுணர்களும் கருத்துரைகள் வழங்கவுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தனும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.
Post a Comment