ஆட்டோ சாரதிகள் அனுமதி பத்திரம் பெறும், வயதெல்லையை 25 ஆக கட்டுப்படுத்த யோசனை
முச்சக்கரவண்டியை செலுத்துவதற்கான சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வயதெல்லையை 25 ஆக மட்டுப்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட பிரேரணைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபை முன்வைத்த யோசனைக்கு அகில இலங்கை முச்சக்கரவண்டி தொழிற்சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இதனூடாக எதிர்பார்த்த பிரதிபலனை பெற்றுக்கொள்ள முடியாது என சங்கத்தின் செயலாளர் ரி.ஆர்.ஆர்.பள்ளி தெரிவித்தார்.
சில முச்சக்கரவண்டி சாரதிகள் சட்டவிரோத போதைப் பொருள் கடத்தல், ஆட்கடத்தல், கொள்ளைச் சம்பவங்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக வருமானத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் வயதெல்லையை கட்டுப்படுத்தும் யோசனை முன்வைக்கப்பட்டது.
இதன்காரணமாக, முச்சக்கரவண்டி சாரதிகள் அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையை 25 ஆக கட்டுப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டது.
இதன்பொருட்டு ஜனாதிபதியின் அனுமதியும் கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment