அகதி எனும் பிள்ளைக்கு வயது 25
-ஏ எம் மொஹமட் அனீஸ் (அகதி)
முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடம்,இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்-
இடம்பெயர்ந்து
இருபத்தைந்தாண்டுகள்.
இது தந்த
இன்னல்கள்
இன்னுமே ஆறவில்லை.
இருக்க
இடமில்லை,
இறைக்க தண்ணீரில்லை,
இயற்கையும்
இறைவனும் தந்தது
இறப்பொன்றே.
இரத்தத்தாலும்
இறப்புகளாலும்
இயற்றப்பட்ட
இதுவொரு
இதிகாசம்.
இலக்கணம்
இல்லா
இன்னலகளின்
இனிய ஓலம்.
இன்றோடு
இருபத்தைந்தையும்
இடறி விட்டோம்.
இதுவரை
இதற்கான
இறுதி நீதியில்லை.
இதைப்பற்றி
இயந்துரைக்க
இனிமேலும்
இயலாது.
இயன்றவரை
இயம்பியும் விட்டோம்.
இறுதிவரை
இதுதான் கதி.
Post a Comment