Header Ads



வடக்கு முஸ்லிம்களின் இனச்சுத்திகரிப்பு, 25 வருட நிறைவில் மைத்திரி + ரணில் + சந்திரிக்கா பங்கேற்பு

வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகப் பிரதேசத்திலிருந்து பாசிசப் புலிகளின் பலாத்கார இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாகி 25 வருடங்கள் நிறைவடைவதையிட்டு பிரமாண்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வழிநடத்தலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் அகியோரையும் பங்கேற்கச்செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு முஸ்லிம்களின் கடந்தகால அவலங்களை எடுத்தியம்பும் விவரணப்படம், 3 மொழிகளிலும் ஆன நூல்கள்  வெளியிடவும் மற்றும் கண்காட்சி உள்ளிட்ட நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக முஸ்லிம் அமைப்புக்களின் ஒத்துழைப்புக்கள், முஸ்லிம் நாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்களின் ஆதரவும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

பிற்குறிப்பு - ஜப்னா முஸ்லிம் இணையமும் இதையொத்த ஒரு நிகழ்வை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸா, அநுரகுமார திசாநாயக்கா உள்ளிட்டவர்கள் பங்கேற்க இணக்கம் வெளியிட்டிருந்தனர். இதுபற்றிய ஆயத்த ஏற்பாடுகளையும் ஜப்னா முஸ்லிம் இணையம் மேற்கொண்டுவந்தது. எனினும் தற்போது அந்தத் திட்டத்தை ஜப்னா முஸ்லிம் இணையம் கைவிட்டுள்ளது.

2 comments:

  1. ஜப்னா இணையத்தளம் இத்திட்டத்தை கைவிட்ட காரணத்தையும் அதன்பிண்ணனியையும் வாசகர்களுக்கு அறியும் உரிமை இருக்கின்றது. எனவே தயவுசெய்து ஏன் கைவிட்டது என்ற காரணத்தை வாசகர்களுக்கு இங்கு அறிவிப்பது மிகப் பொருத்தமும் வாசகர்களின் உரிமையை மதிப்பதுமாகும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

    ReplyDelete
  2. இனதயாவது உருப்டியாகச் செய்வார்களா? நமது கண்ணியத்திற்குரிய உலமாக்கள் அல்லது இதற்கும் மத்கப் விளக்கம் தேடுவார்களோ? அல்லது பலசேனா நம்மை இனவாதிகள் என்று சொ;லும் என்று கடைசியில் நிறுத்தி விடுவார்களேள? எதுவோ அந்த 25 வருட அகதி வாழ்ககை அந்த மக்களுக்கு முடிந்நால் போதும்

    ReplyDelete

Powered by Blogger.