Header Ads



தனியார் துறையினரின் சம்­ப­ளத்தை 2,500 ரூபாவால் அதி­க­ரிக்க யோசனை

தனியார் துறையினரின் சம்­ப­ளத்தை 2,500 ரூபாவால் அதி­க­ரிக்கும் யோசனையை உள்ளடக்கிய அமைச்சரவைப் பத்திரம் இன்று கூடவுள்ள அமைச்சரவையில் சமர்ப்­பிக்­க­வுள்­ளது . 

தொழில் மற்றும் தொழிற்­சங்­கங்­களின் தொடர்­பாடல் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சரவை அனுமதியைப் பெற்றவுடன் குறித்த அமைச்சரவைப் பத்திரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தனியார் துறையினரின் ஆகக்குறைந்த சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனையும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.