224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து, ரஷ்யா சென்ற விமானம் வெடித்து சிதறியது
224 பயணிகளுடன் எகிப்தில் இருந்து புறப்பட்டு சென்ற ரஷ்ய விமானம் வெடித்து சிதறியுள்ளது. ஷாம் எல்ஷேக் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது. விமானத்தில் ரஷிய சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்தாக கூறப்படுகிறது. எகிப்து எல்லையை கடந்து ரஷ்ய நோக்கி சென்ற போது சினை பெனிசுலாவில் சார்கோ என்ற இடத்தில் விமானம் வெடித்து சிதறி உள்ளது. இதில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. இதனை எகிப்து பிரதமர் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து தேடுதல் நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளது.
Post a Comment