பாத்திமா வித்தியாலய ஆய்வுக்கூடம் 2 அரசியல்வாதிகளால் 2 தடவைகள் இன்று திறக்கப்பட்டது (வீடியோ)
மட்டக்களப்பு, ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வுக்கூடம் இரண்டு அரசியல்வாதிகளால், இரண்டு தடவைகள் இன்று (28) திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்தில் மத்திய அரசினால் விஞ்ஞானக் கூடமொன்று நிறுவப்பட்டது.
இந்த ஆய்வுக்கூடத்தை கிழக்கு மாகாண முதலமைச்சர் இன்று திறந்து வைக்கவிருந்த நிலையில், கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலி இன்று திறந்து வைத்தார்.
இதன் பின்னர், ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்திற்கு வருகைதந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் பாடசாலையின் விஞ்ஞான கூடத்தை மீண்டும் திறந்து வைத்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் அமீர் அலி மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் ஆகியோரின் கருத்துக்களை காணொளியில் காண்க… வீடியோ
இந்த சம்பவம் எதன் உச்சம்? பிரிவினையா, பொறாமையா அல்லது மடமையா?
ReplyDeleteBunch of Jokers..
ReplyDeleteஇந்த செய்தியை படிக்கும் வாசகர்கலிடம் நான் ஒரு கேள்வியை முன்வைக்கின்ரேன் அப்போதைய சூழ்நிலையில் அடிக்கல் இட்டவர் அமீரலியாக இருந்தாலும் இப்போதைய சூல்நிலையில் பதவிமுரைவைதுத்துபார்க்கும் போது முன்னால் சென்றவர் மகனும் பின்னால் வந்தவர் தந்தையாகவும்தானே நாம் பார்ப்போம் ஆகவே வாப்பாவை முந்திக்கொன்டு மகன் ஒரு வேலைசெய்தால் அந்த மகனை என்ன சொல்லிஅழைக்கவேன்டும் அதுமட்டுமல்ல சென்ரதும் சென்ரார் அங்கு பேசும் பேச்சை பார்த்தீர்களா?நக்கலும் நையான்டி ஆய்வுகூடமாணவர்கள் முதல்கட்டமாக இவரின் மூலையை சலவைசெய்துபார்க்கவேன்டும்
ReplyDeleteAmmer Ali & his gangs style is like that...what we can say.....
ReplyDeleteபொறாமையின் உச்ச கட்டம் கெட்டகேட்டுக்கு இவர்ஙகளின் பின்னால் சமுதாயம்
ReplyDelete