அடுத்தடுத்து பதவியேற்ற அரசுகள், அரசியல்வாதிகள், சர்வதேச சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட வடபகுதி முஸ்லிம்கள் (பகுதி 1)
-ஆங்கிலத்தில் லத்தீப் பாரூக்
- தமிழில் நொஷாத் மொஹிடீன்-
(இந்தக் கட்டுரை தமிழ் பத்திரிகையொன்றுக்கு பிரசுரத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் திட்டமிட்டு புறக்கணித்துவிட்டார்கள். உறவுகளே புரிகிறதா..? தமிழ் இனவாதமும் பரவியுள்ளது என்பதை)
முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் அடுத்தடுத்து பதவியேற்ற அரசுகளாலும் சர்வதேச சமூகத்தாலும் கூட கைவிடப்பட்ட நிலையில் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இனச் சுத்திகரிப்பின் பலனாக உள்நாட்டில் அகதிகளான முஸ்லிம்களின் அவல நிலை கால் நூற்றாண்டுக்கு மேலாக தொடருகின்றது. இந்த நாட்டின் முஸ்லிம் அரசியல் போக்கினதும் சமூகத்தினதும் வங்குரோத்து நிலைக்கு எடுத்துக்காட்டாகவே வடபகுதி முஸ்லிம்களின் நிலை அமைந்துள்ளது.
வடபகுதி மண்ணினதும் சமூகத்தினதும் ஒரு அங்கமாக இருந்தவர்கள்தான் முஸ்லிம்கள். பல நூற்றாண்டுகளாக இந்த நிலை காணப்பட்டது. அன்றைய வடபகுதி முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் அறிந்திருந்த ஒரே அயலவர்களாக இருந்தவர்கள் தமிழர்கள் தான். இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு வடபகுதி முஸ்லிம்கள் விஜயம் செய்தால் அவர்களுக்கு அங்கே சௌகரியம் இருக்காது. சமூக சூழலைக் கூட அவர்கள் வித்தியாசமாகவே உணர்ந்தார்கள். குறிப்பாக இலங்கையின் ஏனைய பகுதிகளில் அவர்கள் எதிர்நோக்கிய பிரதான பிரச்சினை மொழிப் பிரச்சினையாகக் காணப்பட்டது.
1980களின் பிற்பகுதியில் கூட யாழ்ப்பாண நகரை மையப்படுத்தியதாக சனநெரிசல் மிக்க பகுதிகளிலேயே முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தனர். சோனகர் தெரு, ஒட்டுமடம் மற்றும் பொம்மைவெளி ஆகிய பகுதிகள் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த முஸ்லிம் வட்டாரம் அல்லது வலயம் என இனம் காணப்பட்ட பகுதிகளாக இருந்தன.
கட்டிடப் பொருள் மொத்த விற்பனை, லொறிப் போக்குவரத்து, நகை விற்பனை , தையல் தொழில், விவசாயம், மற்றும் மீன்பிடி என பல நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் விவசாயக் காணிகள் ,மீன்பிடிப் படகுகள் என்பனவற்றுக்கு மேலதிகமாக சொந்தமாக வீடுகள், சொத்துக்கள் என்பனவும காணப்பட்டன. ஒரு காலகட்டத்தில் யாழ்ப்பாண வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது என்று கூடக் கூறலாம். எந்த அளவுக்கு என்று சொன்னால் யாழ்ப்பாண முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவினால் கட்டப்பட்ட யாழ்ப்பாண புதிய சந்தை கட்டிடத் தொகுதியில் மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
யாழ்ப்பாண முஸ்லிம்கள் இனப் பிரச்சினையிலிருந்து விலகியே இருந்து வந்தனர். இருபபினும் இனப் பிரச்சினை அவர்களை விட்டுவைக்கவில்லை. பாரம்பரியமாக அவர்கள் வாழ்ந்து வந்த அமைதியான வாழ்விற்கு இனப்பிரச்சினை பங்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு தடவையும் பாதுகாப்பு படையினருக்கும் டுவுவுநு இனருக்கும் இடையில் கடும் சண்டைகள் ஏற்படுகின்றபோது அவற்றின் தாக்கம் முஸ்லிம்களையும் விட்டுவைக்கவில்லை. அவர்களுடைய வீடுகளும் வர்த்தக நிலையங்களும் ஏனைய சொத்துக்களும் கூட இதனால் பாதிக்கப்பட்டன. ஒவ்வொரு தடவையும் முஸ்லிம்களும் பெரும் இழப்புக்களுக்கு முகம் கொடுத்தவர்களாகவே வாழ்ந்து வந்தனர்.
கிழக்குப் பிராந்தியத்தில் படுகொலைகள் இடம்பெற்ற போதிலும் கூட வடபகுதியில் முஸ்லிம்கள் தமிழர்களோடு சமாதானமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் சில தகவல்களின் பிரகாரம் வடபகுதியில் தமிழ் முஸ்லிம் சமூக நல்லுறவை சீர்குலைக்கும் நச்சுப் பாம்பாக செயற்பட்டவர் கரிகாலன் எனத் தெரிய வந்துள்ளது. கிழக்கில் இடம்பெற்ற பிரச்சினைகளை வைத்து அதில் முஸ்லிம்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லாதபோதிலும் கூட வடபகுதி முஸ்லிம்கள் பலி வாங்கப்பட வேண்டும் என்ற உணர்வை டுவுவுநுற்குள் ஏற்படுத்தியவர் இவரேயாவார். தன்னுடைய தீய திட்டத்தின் ஒரு அங்கமாக பிரபாகரன் மீது அழுத்தங்களைப் பிரயோகித்து முஸ்லிம்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கத் தூண்டி அதன் மூலம் கிழக்கு முஸ்லிம்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுப்பதுதான் கரிகாலனின் திட்டமாக இருந்தது.
இந்தத் திட்டத்தின் தெடராக மிக நன்றாக திட்டமிட்டு காய் நகர்த்தி வட மாகாணத்தின் கீழ் வரும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். வட பகுதிகளில் உள்ள மேற்படி மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றுவதில் கிழக்கைச் சேர்ந்த LTTE உறுப்பினர்களே பிரதான பஙகேற்றனர் என்பது சில வருடங்கள் கழித்து தான் தெரியவந்தது.
அரசாங்கத்தைப் போலவே LTTE யும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை ஊக்குவித்து அதன் மூலம் கிழக்கில் தனது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபட்டது. அதைத்தான பிற்காலத்தில் வடபகுதியில் இன சுத்திகரிப்பு கொள்கைக்காகவும் அவர்கள் பயன்படுத்தினர் என்று அன்றைய காலகட்டத்தில் நேத்ரா என்ற காலாண்டு சஞ்சிகை தனது இதழில் குறிப்பிட்டிருந்தது.( 1998 ஏப்ரல்-ஜுன் வெளியீடு) கிழக்கு மாகாண தமிழர்களை போல் அன்றி வட பகுதி தமிழர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தமது கடுமையான ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டுக்கு பெரும்பாலும் ஒத்துழைக்க மாட்டார்கள் என்பதை LTTE உம் அறிந்து வைத்திருந்தது. இதனால்தான் LTTE கிழக்கு மாகாணத்திலுள்ள தனது உறுப்பினர்களைப் பயன்படுத்தி 1990ல் வடபகுதியிலிருந்து முஸ்லிம்களை முழுமையாக வெளியேற்றியது.
வட பகுதியின் ஏனைய பிரதேசங்களிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டும் கூட யாழ்ப்பாண முஸ்லிம்கள் பாதுகாப்பாகவே இருந்தனர். ஏனைய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை தமக்கு ஏற்படாதென யாழ்ப்பாண முஸ்லிம்கள் உறுதியாக நம்பினர். அவர்கள் தங்களை யாழ்ப்பாண சமூகத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கமாக கருதியிருந்தமையே இந்த நம்பிக்கைக்கு காரணமாகும். டுவுவுநு அவர்களையும் அங்கிருந்து துரத்தும் என்பதை அவர்கள் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. அந்தளவுக்கு அவர்கள் தமது தமிழ் நண்பர்களையும் அயலவர்களையும் ஏன் ஆயுதபாணிகளையும் கூட நம்பியிருந்தனர். அதனால் டுவுவுநு அவர்கள் குறித்து என்ன திட்டத்தை வைத்திருந்தது என்பதை கடைசி வரையில் அவர்களால் எண்ணிப்பார்க்கக் கூட முடியவில்லை.
இவ்வாறான ஒரு பின்னணியில் LTTE ன் யதார்த்த நிலைப்பாடு என்னவென்பதை புரிந்து கொள்ளவும் அவர்களுக்கு அதிக காலம் செல்லவில்லை. 1990 அக்டோபர் 30ல் முஸ்லிம்களின் பொழுது வழமைபோல்தான் புலர்ந்தது. மக்கள் இயல்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வர்த்தகர்கள் கடைகளுக்குச் சென்று வியாபாரத்தை தொடங்கினர். பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்றனர். இல்லத்தரசிகள் தமது பணிகளில் தீவிரமாக இருந்தனர். காலை 11.30 அளவில் அந்த மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட அந்த அபாய அறிவிப்பு வெளிவந்தது. வாகனங்களில் பொருத்தப்பட்ட ஒலிபெருக்கிக் கருவிகள் மூலம் டுவுவுநு உறுப்பினர்கள் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை சுற்றி சுற்றி அந்த அறிவிப்பை விடுத்தனர். அரைமணி நேரத்திற்குள் அதாவது நண்பகல 12 மணிக்குள் அந்தப் பகுதிகளில் செறிந்து வாழும் எல்லா முஸ்லிம்களும் ஒஸ்மானியா கல்லூரியிலுள்ள ஜின்னா மைதானத்திற்கு வர வேண்டும். என்பதுதான் அந்த அறிவிப்பு.
அச்சத்தாலும் அதிர்ச்சியாலும் உறைந்து போன முஸ்லிம்கள் என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியாமல் ஜின்னா மைதானத்தை நோக்கி விரைந்தனர். அங்கே LTTE ன் யாழ்ப்பாண கமாண்டர் இளம்பரிதி மற்றும் சிரேஷ்ட LTTE தலைவர் ஆஞ்சனேயர் ஆகியோர் அங்கிருந்தனர். 12.30 அளவில் இளம்பரிதி மக்கள் மத்தியில் உரையாற்றினார். 'இன்னும் 2 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாணத்திலிருந்து எல்லா முஸ்லிம்களும் வெளியேற வேண்டும். என்பது LTTE தலைமைப் பீடத்தின் முடிவாகும். இது உங்களுக்கான உத்தரவு. இதை ஏற்க மறுத்தால் கடும் தண்டனைக்கு ஆளாக வேண்டும்.' என்பதுதான் அவரின் உரையாகும்.
சில முஸ்லிம்கள் தமது சந்தேகம் குறித்து இளம்பரிதியிடம் கேள்வி எழுப்ப முனைந்தனர். அதற்கு பதிலாக கோபமுற்ற அவர் வானத்தை நோக்கி தாறுமாறாக சுடத் தொடங்கினார். அவரைத் தொடர்ந்து அவருடைய பாதுகாவலர்கள் மற்றும் அங்கிருந்த சகாக்களும் வானத்தை நோக்கி சரமாரியாக வேட்டுக்களை தீர்த்தனர். இது உத்தரவு . இங்கே கேள்விகளுக்கு இடமில்லை. கேள்விகள் கேட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று அவர் கர்ச்சித்தார். அப்போதும் கூட ஏதோ நிலைமை கருதி இப்படி செய்கிறார்கள.; விரைவில் இயல்பு நிலை திரும்பி தாங்களும் வீடு திரும்பலாம் என்றுதான் முஸ்லிகள் நம்பினர். அவர்கள் மீண்டும் தங்களுடைய வீடுகளுக்கு சென்றபோது அவர்களைப் பின்தொடர்ந்த LTTE யினர் அவர்கள் தங்களது பொருட்களோடு ஏற்கனவே திட்டமிட்டபடி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பஸ் வண்டிகளில் வந்து ஏறும் வரை கூடவே பின்தொடர்ந்தனர். அப்போதுதான் இது ஏற்கனவே மிக நன்றாக திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்படும் ஒரு விடயம் என்பதை முஸ்லிம்களும் புரிந்து கொண்டனர்.
வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்ற உத்தரவை ஏற்று தமது உடைமைகளோடு வெளியேறிய முஸ்லிம்களுக்கு அடுத்த அதிர்ச்சியூட்டும் உத்தரவையும் LTTEயினர் வழங்கினர். சகலரும் ஐந்துமுச்சந்தியில்; ஒன்று திரள வேண்டும் என்பதுதான் அந்த இரண்டாவது உத்தரவு. அந்த இரண்டாவது உத்தரவின் மூலம்தான் முஸ்லிம்களின் காணிப்பத்திரங்கள், நகைகள,; பணம் உட்பட அனைத்து உடைமைகளும் சூறையாடப்பட்டன. ஒரு ஆள் 150 ரூபா மட்டுமே கொண்டு செல்ல முடியும். உடுத்திருக்கும் உடையைத் தவிர மாற்று உடை ஒன்று மட்டுமே கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட்;டது. இந்த முஸ்லிம்கள் மத்தியில் பெரிய அளவிலான வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களான செல்வந்தர்கள் ,பெரும் பண்ணை நிலங்களையும் வாகனத் தொடரணிகளையும் கொண்டிருந்த செல்வந்தர்கள் என பலர் காணப்பட்டனர். இவர்களுடைய கைகளில் ஒரு பிச்சைப் பாத்திரம் கொடுக்கப்பட்டு ஒருவேளை உணவிற்காக அவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர்.
சில முஸ்லிம்கள் இதனை எதிர்த்தனர். அவ்வாறு எதிர்த்த முஸ்லிம்கள் டுவுவுநுன் ஆயுதங்களால் மௌனமாக்கப்பட்டனர். அந்த இடத்தில் வைத்து முஸ்லிம்களுக்குச் சொந்தமான அனைத்து உடைமைகளும் ஆவணங்களும் தேசிய அடையாள அட்டை உட்பட பறிக்கப்பட்டன. முஸ்லிம் பெண்களினதும் சிறுமிகளினதும் கழுத்துகளிலும் கைகளிலும் இருந்த நகைக் கூட பறிக்கப்பட்டன. டுவுவுநுன் பெண் உறுப்பினர்கள் சிலர் முஸ்லிம் பெண்களினதும் சிறுமிகளினதும் நகைகளை வெறித்தனமாக வேட்டையாடினர். நகைகளை கழற்றி எடுக்காமல் காதுகளிலிருந்து ரத்தம் வழிய வழிய கோரமாக குதறி எடுத்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. சிறுவர் சிறுமியரை கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவர்களது கரங்களிலிருந்த கைக்கடிகாரங்கள் மோதிரங்கள் என்பனவற்றைக் கூட மோப்பம் பிடித்து பிடுங்கியெடுத்தனர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக யாழ்ப்பாண முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்த கோடீஸ்வர வர்த்தகர்கள் 35 பேர் கரிகாலனின் மேற்பார்வையில் கடத்திச் செல்லப்பட்டனர்.
அத்தோடு நிறுத்தவில்லை. முஸ்லிம்கள் தமது நகைகள் மற்றும் உடைமைகளை எங்காவது மறைத்து வைத்திருக்கின்றனரா என்பதை தெரிந்து கொள்வதற்கான சித்திரவதைகளும் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். சில வர்த்தகர்களின் விடுதலைக்காக பெருமளவு பணம் கப்பமாக கோரப்பட்டது. சிலர் அதனை செலுத்தினர் அன்றைய காலகட்டத்தில் சுமார் 30 இலட்சம் ரூபா வரை செலுத்தி சிலர் தமது அன்புக்குரியவர்களைக் காப்பாற்றிக் கொண்டனர். ஒரு சிலர் பிற்காலத்தில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் யாருக்கும் தெரியாது. இவர்கள் அனைவரும் டுவுவுநு ஆல் கொல்லப்பட்டதாகவே நம்பப்படுகின்றது. தொடரும்
Post a Comment