வியாபாரம் மேற்கொள்வதற்கு இலகுவான, நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 113 ஆவது இடம்
வியாபாரம் மேற்கொள்வதற்கு இலகுவான நாடுகளின் பட்டியலில் 113 ஆவது இடத்தில் இலங்கை உலக நாடுகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலகுவான நாடுகளின் பட்டியலில் இலங்கை 6 இடங்கள் முன்னேறியுள்ளது.
189 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் கடந்த வருடத்தில் 113 ஆவது இடத்திலிருந்த இலங்கை இம்முறை 107 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலானது உலக வங்கியினால் வருடாந்தம் வெளியிடப்படுகின்றது.
வியாபாரத்தை ஆரம்பித்தல், அனுமதிப் பத்திரத்தை பெறல், மின்சாரம் பெற்றுக்கொள்ளல் மற்றும் இடங்களைப் பதிவு செய்தல் முதலான பத்து விடயங்களைக் கருத்திற்கொண்டே இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
இதனடிப்படையில், சிங்கப்பூர் முதலிடத்திலும் நியூசிலாந்து மற்றும் டென்மார்க் ஆகியன முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும் உள்ளன.
வியாபாரத்தை ஆரம்பிப்பது தொடர்பில் இலங்கை 98 ஆவது இடத்திலும், கட்டுமானத்திற்கான அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதில் இலங்கை 77 ஆவது இடத்திலும் உள்ளது.
அத்துடன், பட்டியலில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளும் வசதி தொடர்பில் இலங்கை 81 ஆவது இடத்திலுள்ளது.
வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான வசதிகள் தொடர்பில் தெற்காசிய நாடுகளான பூட்டான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் முதலிரண்டு இடங்களில் உள்ளதுடன் இலங்கை 3 ஆம் இடத்திலுள்ளது.
தெற்காசிய வலயத்தில் பிரபலமான நாடான இந்தியாவிற்கு 130 ஆவது இடமே கிடைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் வியாபாரத்தை ஆரம்பிப்பதற்கான வசதிகள் மிகக்குறைவாக உள்ள நாடாக எரித்திரியா உள்ளது.
நாகரீகமாக, சிந்தனா ரீதியாக நான் எழுதும் கருத்துக்களை பிரசுரிக்க மறுப்பதன் மர்மம் என்ன?
ReplyDeleteஎனது கருத்துக்கள் அல்லாஹ்வின் மதத்தை பாதித்துவிடும் என்று நம்பினால், நீங்கள், அல்லாஹ்வை விட என்ன சக்தி மிக்கவராக பார்க்கின்றீர்கள் என்றுதான் அர்த்தம். இது நீங்களே அல்லாஹ்வை இழிவு செய்யும் செயலாகும்.
நிலவன் அவர்களே, முதலில் நீங்கள் ஒரு மன நோய் மருத்துவரை பாருங்கள் இது உங்களது ஆரோக்கியமான, அமைதியான, நிம்மதியான நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் என நம்புகிறோம். பேச்சு சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் போன்றவை மற்றவருடைய உரிமைகளிலோ அல்லது மாற்று மதத்தினருடைய உணர்வுகழிலோ பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். இவைகளையெல்லாம் கவனத்தில் கொண்டுதான் Jaffna Muslim செயற்படும் என நினைக்கிறோம்.
ReplyDeleteIn my experience, Jaffnamuslims.com never hesitate to publish credible comments, however media should be responsible of not publishing adverse comments or comments that could damage religious belifs of others
ReplyDeleteஜப்னா முஸ்லிம், ஏன் எனது கோமண்டை கட் பண்ணுகின்றீர்கள்? குருவிக்கு பதில் சொல்ல கூடாதா? மிக மோசமான வேலை. (நீங்கள் கட் பணன்வில்லை என்றால், உங்கள் SPAM folder ஐப் பாருங்கள்)
ReplyDeleteஇப்படி இதன் பிறகு செய்ய வேண்டாம், நாங்களும் சிரமத்துடன் தான் டைப் பண்ணி கொமன்ட் பண்ணுகின்றோம்.
நான் இங்கே பதிந்த கருத்துக்களை அனுமதிக்காமல் செய்வது, பக்கச் சார்பானது.
ReplyDeleteஉங்களின் மட்டுமல்ல எஙகளுடையதும்தான்
ReplyDeleteஜப்னா முஸ்லிம் கொமண்ட்ஸ் ஐ நிராகரிக்கின்றது என்று கூறிய பொழுது, இல்லை அப்படி இல்லை என்று மறுத்த நண்பர்கள் இதையும் படிப்பது நல்லது.
ReplyDeleteகருத்துச் சுதந்திரம் ராஜபக்ஸ ஆட்சி போன்று ஜப்னா முஸ்லிம் இலும் சிக்கலுக்கு உள்ளாக்கப் படுகின்றது.
மோசமான வார்த்தைகளுடன் வரும் சில கொமண்ட்ஸ் எவ்வித தணிக்கையும் இன்றி அனுமதி பெறுகின்ற அதிசயமும் நடக்கின்றது.