Header Ads



உள்ளூராட்சி தேர்தலில், பங்காளிகளுடன் களமிறங்க UNP ஆலோசனை

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலுக்காக ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி செயற்குழுக் கூட்டத்தின் போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த பொது தேர்தலின் போது ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உட்பட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதற்கிடையில் உள்ளூராட்சி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பிரநிதிகளில் 25 வீதம் பெண்களுக்கு வழங்குவதற்கு இதன் போது இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் இடம்பெறவுள்ள முறை தொடர்பில் எதிர்ரும் நாட்களில் பேச்சுவார்ததை நடத்தப்பட வேண்டும் என குறித்த கலந்துரையாடலின் போது கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.