மைத்திரி + ரணிலுக்கு யோசனைகள் சிலவற்றை கையளிக்க JVP தயாராகிறது
ஜே.வி.பி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு யோசனைகள் சிலவற்றை கையளிக்க தயாராகின்றது. கொழும்பில் இன்று (17) இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து
கொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இதனை
தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசாங்கம் முதலில் முன் எடுக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் அந்த யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய அரசாங்கம் விரைவாக நமது நாட்டில் மேற்கொள்ள வேண்டிய பல புனரமைப்பு செயற்பாடுகளை முன்வைக்க வேண்டும்.
இதற்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறைமையை ரத்து செய்தல், புதிய தேர்தல் முறை, ஆணைக்குழுக்கள் ஸ்தாபிக்கப்படுதல் போன்ற பல முன் எடுக்கப்பட வேண்டும்.
அத்துடன் அரசியலமைப்பு சீர்த்திருத்தங்கள், சட்ட மீளமைப்பு பணிகள் என்பன மேற்கொள்ளப்பட வேண்டும்.
அத்துடன் குற்றச்சாட்டப்பட்டவர்களது விசாரணை துரிதப்படுத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.
மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கப்படுமாயின் இந்த யோசனைகள் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Kadayam nadai muraipadutha wandum
ReplyDelete