Header Ads



மகிந்தவை துரத்தும் விசாரணை, மைத்திரிக்கு ITN ஒரு கோடி 80 லட்சம் செலுத்தும் பரிதாபம்

பாரிய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை ஒன்பது மணிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் உள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அலுவலகத்துக்கு வருகை தருமாறு மஹிந்தவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்புவது தொடர்பில் அவர் சுயாதீன தொலைக்காட்சியுடன் ஒப்பந்தமொன்றை செய்து கொண்டிருந்தார்.

இதன் பிரகாரம் அவர் தனது விளம்பரங்கள் தொடர்பில் 62 லட்சம் ரூபாவைச் செலுத்தியுள்ள போதிலும், சுமார் பத்துக்கோடி ரூபா வரை செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேன நான்குகோடி நாற்பத்தி ஆறு லட்சம் ரூபாவுக்கு விளம்பர ஒப்பந்தத்தை செய்து கொண்டிருந்தபோதும், மஹிந்த தரப்பின் தலையீடு காரணமாக உரியமுறையில் அவரது விளம்பரங்கள் ஒளிபரப்பப்படவில்லை.

இதன் காரணமாக அவருக்கு ஒரு கோடி எண்பது லட்சம் ரூபா அளவில் திருப்பிச் செலுத்தநேர்ந்துள்ளது. இதன் மூலமாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுயாதீன தொலைக்காட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேலும் மைத்திரிபால சிரிசேனவின் விளம்பரக்கட்டணங்களை விட பாதிக் கட்டணமே மஹிந்த ராஜபக்சவிடம் அறவிடப்பட்டுள்ளது.

இவ்வாறாக பாரிய தொகைப் பணம் முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய முறைகேடுகள் தொடர்பான விசாரரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளார்.

3 comments:

  1. விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளாரா அல்லது கௌறவ விரிந்தினராக அழைக்க ப்பட்டுள்ளாரா?

    ReplyDelete
  2. Never end these Investigations...

    ReplyDelete
  3. நல்லாட்சியின் மர்மங்கள் மக்களுக்குப் புரிய நீண்ட காலம் எடுக்கும் போல் தென்படுகிறது.

    ReplyDelete

Powered by Blogger.