அகதிகளோடு ISIS தீவிரவாதிகள், ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவக்கூடும் - போப்பாண்டவர்
அகதிகளோடு அகதிகளாக இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் ஊடுருவக்கூடும் என போப்பாண்டவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியா, துருக்கி போன்ற நாடுகளில் நடக்கும் உள்நாட்டு யுத்தம் காரணமாக வறிய மக்கள் பசிக்கொடுமை தாங்க முடியாமல், தங்களின் உயிர்களை காத்துக்கொள்வதற்காக ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளாக தஞ்சம் அடைகின்றனர்.
அவர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் தரவேண்டும் என்று போப் பிரான்சிஸ் சில தினங்களுக்கு முன் வேண்டுக்கொள் வைத்தார்.
இந்நிலையில் போர்த்துகீசிய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போப்பிரான்சிஸ், இங்கிருந்து 400 கிலோமீட்டர்களுக்கு தொலைவில் ஒரு கொடிய தீவிரவாத கூட்டம் செயல்பட்டு வருகிறது.
எனவே அகதிகளோடு அகதிகளாக சேர்ந்து அந்த கும்பல் ஐரோப்பியாவுக்குள் ஊடுருவ அதிக வாய்ப்புள்ளது.
அதே நேரத்தில் அகதிகள் நம் நாட்டுக்கு வரும்போது பாதுகாப்பு தொடர்பான விசயங்களை ஒதுக்கிவைத்துவிட்டு அவர்களுக்கு நாம் அடைக்கலம் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.
இவர் என்ன இரண்டுமாதிரியும் பேசுகின்றார்.
ReplyDeleteISIS கொடியவர்கள் தான். அவர்களை அழித்து, ஈராக்கில் சதாம் ஹசனை வீழ்த்தியது போன்று உலக நாடுகள் இணைந்து வீழ்த்தினால், சிறிய அகதிகளை அவர்காளின் நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடலாமே? பிரச்சினை இருக்காதே.
மிகவும் நகைப்புக்கிடமான சிந்தனை, காரணம்;
ReplyDelete1. ஐரோப்பாவில் இருந்து சென்று ISIS உடன் சேர்ந்து போரிடுகிறார்கள் ஐரோப்பிய இளைஞர்கள், பிறகு ஏன் அவர்கள் இங்கு அகதிகள் வேசத்தில் திரும்ப வரவேண்டும்.
2. மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் ( இந்த ஆயுதங்களை பெற்றுக்கொள்ள முடியுமாக இருந்தால் ) உலக வல்லருசுகலையே எதிர்த்து வருடக்கணக்காக போரிடும் ஒரு இயக்கத்துக்கு தங்களது போராளிகளை ஐரோப்பாவுக்கு அகதிகளாக அனுப்ப வேண்டும் என்ற தேவை இல்லை. அவர்கள் VIP களாகவே ஐரோப்பாவுக்கு, அவர்களது போராளிகளை அனுப்ப முடியும்.
சதாம் ஹுசைனை விழ்தியது போல் isisI ஐ வீழ்த்த முடியாது. சதாம் ஹுசைன் பொதுமக்களுக்குள் மறைந்திருக்கவில்லை.(சதாமுக்கு வக்காலத்து வாங்கவில்லை) ஒரு இராணுவமாக யுத்தம் செய்தார். கடைசியில் பிடிபடும் போதும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
ReplyDeleteஆனால் Isis நம் நாட்டிலும் ஊடுருவியிருப்பது கசப்பான உண்மை. படித்த மேதையொருவர் அண்மையில் சிரியாவில் மரித்ததை மறுக்கமுடியாது. ஆக அவர்கள் ஐரோப்பாவுக்குள் இப்பொழுதே ஊடுருவியிருக்கலாம் என்பதே என் யூகம். இஸ்லாத்தின் பெயரில் பரவும் இந்த வைரஸை அழிப்பது அவ்வளவு இலகுவான காரியம் அல்ல.
அல்கெய்தா, தலிபான், ஹமாஸ் போன்ற இயக்கங்களுடன் இவர்கள் மோதினால்தான் உலக முஸ்லீம்கள் நிம்மதியாக வாழமுடியும்.