Header Ads



IS பயங்கரவாத அமைப்பிலும் இனவாதம்

இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) குழுவில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அவ்வாறு வெளியேறியவர்களின் வாக்குமூலத்தை மேற்கோள்காட்டி புதிய அறிக்கை ஒன்று வெளியாகி யுள்ளது.

தீவிரவாதம் தொடர்பான சர்வதேச ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஐ.எஸ்ஸில் இருந்து நூற்றுக்கணக்கானவர்கள் வெளியேறியும் வெளி யேற முயன்றும் வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சக முஸ்லிம்களை கொ^மாக நடத்துவது மற் றும் அமைப்புக்குள் இஸ்லாமிய பண்புகள் இல் லாமை போன்றவையே இவ்வாறு வெளியேறு வதற்கு முக்கிய காரணம் என்று அந்த ஆய்வு அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இதில் இந்தியாவில் இருந்து ஐ.எஸ்ஸில் இணைந்த ஒருவர் அந்த குழுவுக்குள் சமத்துவம் இல்லை என்றும் இனவாதம் செயற்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 'இது ஒரு புனிதப்போரல்ல" என்று அந்த இந்திய நாட்டவர் குறிப்பிட்டுள்ளார். தனது தோலின் நிறம் காரணமாக தம்மை கழி வறையை சுத்தம் செய்ய பயன்படுத்தியதாக அந்த இந்திய நாட்டவர் ஐ.எஸ். மீது குற்றம்சாட்டியி ருந்தார்.

மறுபுறம் ஐ.எஸ்ஸில் வெளிநாட்டினருக்கே அதிக அந் தஸ்த்து வழங்கப் படுவதாகக் குறிப்பிட்டு சிரிய நாட்டைச் சேர்ந்தவர்களில் சிலர் அந்த குழுவில் இருந்த விலகியுள் ளனர். இவ்வாறு ஐ.எஸ்ஸில் இருந்து விலகிய 58 பேரது வாக்குமூலங்கள் அந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட் டுள்ளது.

2 comments:

  1. isis இன் வந்த வேகத்திலேயே மறையப்போகிறது என்பது புரிகிறது. அடுத்து ஜிஹாத் எனும் பேர்வையில் உலகை உலுக்கப்போகும் பயங்கரவாத அமைப்பு என்ன என்றுதான் பார்க்கவேண்டும். ஹமாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் ஈரானின் உதவியுடன் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் பயிற்சி கொடுக்கும் வீடியோக்களும் யூடியுபில் உள்ளது.

    ReplyDelete
  2. yar iwaru mohamed??? HAMAS ITKUM HISBULLAHWUKKUM withiyasam theriyama comments adikkuraaru,,, firstku mujahidgal yaar trrorist yar andru padeenga

    ReplyDelete

Powered by Blogger.