Header Ads



யாழ் அஸீம் கவிதை நூல், தமிழகத்தில் அறிமுகம்

வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வலிகளையும் வாழ்வியலையும் வெளிப்படுத்தும் கவிஞர் கலாபூஷணம் யாழ். அஸீம் அவர்களின் கவிதைத் தொகுப்பான 'மண்ணில் வேரோடிய மணசோடு' கவிதை நூல் அண்மையில் தமிழகத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 

இலங்கை இந்திய (தமிழக) உறவுப் பாலத்தை வலுப்படுத்தும் ஒரு தொடர் முயற்சியாக தமிழகப்  படைப்பாளர்கள் சங்கம், நிலாவட்டம் கவிதை உறவு அமைப்புக்களின் அனுசரனையில் சென்னையில் சமீபத்தில் நாடும், ஏடும் நன்கறிந்த எழுத்தாளர் (லைட்ரீடிங்) தமிழ்மணி மானா மக்கீன் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்வில் கவிஞர் யாழ். அஸீம் அவர்களின் கவிதைத் தொகுப்பு 'மண்ணில் வேரோடிய மணசோடு' தமிழக இலக்கிய வட்டத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் தமிழக இலக்கியப் பிதாமகர் கவிவேந்தர் முஹம்மது மேத்தா (மு. மேத்தா), கண்ணதாசன் பதிப்பக இயக்குநர், கவிஞர் கண்ணதாசன் மகன், காந்தி கண்ணதாசன் படைப்பாளர் சங்கத் தலைவர் சுடர் முருகையா ஆகியோருக்கு மானா மக்கீன் சிறப்பு பிரதிகளை வழங்கி வைத்தார்.

கவிஞர் யாழ். அஸீம் அவர்களது 'மண்ணில் வேரோடிய மனசோடு' என்னும் இக்கவிதை நுலுக்கு கடந்த ஆண்டின் மிகச் சிறந்த கவிதை நூலுக்கான கொடகே தேசிய சாகித்திய விருது கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.


3 comments:

  1. அஸீம் மாஸ்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    அஸீம் மாஸ்டர் அவர்கள் இந்தியா செல்ல முடியாமைக்கு அவரின் பொருளாதார நிலைமைகளே காரணமாக இருக்க வேண்டும்.

    வசதியான யாழ் முஸ்லிம்கள் கவனத்தில் செலுத்த வேண்டிய விடயம்.
    நம்மிடம் இருக்கும் ஒரு கலைஞருக்கு ஊக்கமளிப்பதுடன், வளமான வாழ்வுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் கலாபூசனம் யாழ் அஸீம் அவர்களுக்கு.
    யாழ் முஸ்லிம்களின் வரலாற்றை ஒரு காப்பியமாக வடித்து வெளியிடுவது அவரது அடுத்த முயற்சியாக இருக்கவேண்டுமென்பது எனது அவா.

    ReplyDelete
  3. Very happy to hear that the collection of poetry composed by Yarl Azeem has spread in overseas too. Congratulations! May Almighty Allah's Blessings be upon him.

    ReplyDelete

Powered by Blogger.