ரணில் + மங்கள லடாயா..?
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் சில பொறுப்புக்களை, சர்லுவதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவிடம் பிரதமர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமரின் வெளிநாட்டு விஜயங்களின் போது கைச்சாத்திடப்படும் ராஜதந்திர ஒப்பந்தங்களில் மங்களவிற்கு பதிலாக, மலிக் கையொப்பமிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தங்கள் தொடர்பிலான திட்ட அமுலாக்கம் மற்றும் கண்காணிப்பு பொறுப்புக்களும் மலிக் சமரவிக்ரமவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் காலங்களில் வெளிவிவகார அமைச்சிற்கு பதிலாக சர்வதேச வர்த்தக மற்றும் அபிவிருத்தி தந்திரோபாய அமைச்சு இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
இது தொடர்பிலான ஆலோசனைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.
இதற்கு முன்னதாக அரச தலைவர்களின் வெளிநாட்டு விஜயங்களின் போதான ராஜதந்திர ஒப்பந்தங்களில் வெளிவிவகார அமைச்சரே கையொப்பமிடுவது வழமையாகும் என்பது குறிப்பிடத்தக்கது என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயத்தின் போதும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்க வேண்டாம் என பணிப்புரை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment