Header Ads



பாலைவனத்திலிருந்து ஒரு மடல்...!

-Rumais-

வெளிநாட்டிலிருந்து இரண்டு வருடத்திற்கு ஒரு முறை மட்டும் நாடு வந்து, ஒரு மாத காலம் மட்டும் உல்லாசமாக தங்கி நிற்கும் நீங்கள் இந்த சமூகத்திற்காக என்னதான் செய்திருக்கிறீர்கள் ?? என்று என்னிடம் கேட்ட நண்பனுக்கு ஒரு அழகிய மடல்.

நண்பா ! , உனக்கு ஞாபகம் இருக்கும், இரண்டு பேரும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். பரீட்சை முடிந்தவுடன் நீயும் இதர நண்பர்களும் மேற்படிப்பிற்காக சென்ற போது, வறுமை காரணமாக என்னால் கல்வியை தொடர முடியவில்லை. எனக்கு நல்ல பெறுபேறுகள் இருந்தும் படிக்கின்ற ஆர்வமும் அறிவும் போதியளவு இருந்தும் வறுமையும் குடும்ப சுமையும் என்னை விடவில்லை.

நான் ஒரு விதையாகி, என் தியாகத்தை மூலதனமாக்கி, எனது பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் ஒரு வாழ்வாதாரம் தேடி 19 வயதில் வெளிநாடு சென்றேன்... ஒரு வீட்டு சாரதியாக. இந்த சமூகத்தின் ஒரு பங்காளியான எனது குடும்பத்தை 20 வருடங்கள் ஒரு சாரதியாக தோளில் சுமந்தேன். எனது எதிர்காலத்தை தியாகமாக்கி, படிக்க வேண்டிய வயதில் பாலை வனத்தில் விதையானேன்... சமூகத்திற்காக... இறைவனுக்கு அஞ்சி எனது பெற்றோர், சகோதர்கள் முகத்தில் புன்னைகையைப் பார்க்க நான் கொடுத்த விலை இது.

நானாக உருகிய மெழுகு வர்த்தியில் எனது தம்பி இஞ்சிநியரானான். தங்கை ஆசிரியை ஆனாள். நான் இன்னும் சாரதிதான் நண்பா.... ஏன் என்னால் முடியாது, என் குடுபத்திற்கு செலவு செய்த பணத்தில் 10 லட்சத்தை எனக்காக செலவு செய்து ஒரு பட்டதாரி ஆகி இருக்கலாம். ஆனால் நானாக விழுந்த விதையில் இன்று 2 பட்டதாரிகளை சமூகத்திற்காக தந்திருக்கிறேன்.
இன்று... படித்த ஒரு குடும்பத்தில் நான் மட்டும் பாமரன் ஆனேன் .. செல்வச் செழிப்புள்ள குடும்பத்தில் நான் மட்டும் ஏழையானேன்... சொல்லு நண்பா இதுவா சுயநலம் ?. எனக்கென்று திருமண வயது வந்திருந்தும் எனது ஆசா பாசங்களை உதறிவிட்டு தங்கைக்கு வீடு கட்டுவதற்காக பல லட்சம் செலவு செய்து நல்லதொரு மாப்பிள்ளை பார்த்து கால்யானமும் ஆச்சு 2 பிள்ளைகளும் ஆச்சு. அனால் நான் திருமணம் முடிக்கும்போது எனக்கு வயது 35 ஆனது, நீ முடிக்கும் போது உனக்கு வயது 25 தான். அன்று பெற்றோருக்காக, இன்று மனைவி மக்களுக்காக எனது பயணம் தொடர்கிறது...

எனக்காக ஒன்றும் சேர்த்து வைக்கவுமில்லை , இறைவனை நம்பிதான் 20 வருடங்கள் ஓடியது இனியும் அந்த நம்பிகையூடுதான் வாழ்கின்றேன்.
அனால் கவலையோ மனசோர்வோ அடைந்ததில்லை. சமூகத்தின் ஒரு அங்கத்தை வாழவைத்தேன் என்கின்ற பெருமையும் ஆத்ம திருப்தியும் இருக்கிறது. நீ கேட்ட கேள்வியில்தான் கதி கலங்கி போனேன். நண்பா உனக்கொன்று தெரியுமா. என்னை போல் 15 லட்சம் தியாகிகள் இந்த பாலைவனத்தில் தன உறவுகளுக்காக எத்தனையோ தியாகங்களுக்கு மத்தியில் கூலி வேலை செய்து உளைத்துகொண்டிருக்கிரார்கள் .

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு வரலாறு இருக்கிறது. வாழும் வரலாறு இவர்கள்தான்.. மேலும் இவர்கள்தான் நமது நாட்டில் 60 லட்சம் மக்களுக்கு உணவூட்டுகின்றனர். இதுதான் சமூகப் பற்று. அதன் விருட்சங்கள்தான் இன்று நமது நாட்டில் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும், சட்ட நிபுணர்களாகவும், கணக்காளர்களாவும் உருவாகியது.

பல லட்சம் சகோதரிகள் தன் குடும்பத்தின் வயிற்றுப் பசி போக்க வேறு வழியில்லாமல் பனிப் பெண்ணாக வந்து படும் அவதிகள் எத்தனை. பால் குடிக்கும் குழந்தையை கூட பாட்டியின் தயவில் விட்டுவிட்டு கடல்தாண்டி வந்து என்றாவது ஒரு நாள் நானும் வாழுவேன் என் பிள்ளை தலைப் படட்டும் என்று நம்பியிருந்து ஏமாந்த கதை எத்தனை ?.

குடும்பத்தின் குத்துவிளக்கு... பார் போற்றும் பத்தினி போல் வாழ முடிந்தும்..... வெளி நாடு வந்ததால் சமூகத்தின் கண்களில் பத்தினியெனும் பட்டம் இழந்து நிர்கதியானவர்கள் எத்தனை .. தனிமையில் உள்ளபோதே அகால மரணம் வந்து... யாருமே காணாமல் விதைந்த பூமியில் புதையுண்டவர்கள் எத்தனை.. சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றச்சுமை தாங்கி வாதாட வக்கீல் இல்லாமல் மாய்ந்து போனவர்கள் எத்தனை... நண்பா என் உடலில் கண்ணீர் மட்டும் எஞ்சி இருந்தால் இன்னும் கொஞ்சம் எழுதி இருப்பேன். எங்களுக்கும் வாழ்க்கையுண்டு , நாங்களும் ஒரு நாள் காலையில் தொழிலுக்கு சென்று மலையில் வீடு வந்து குடும்பத்தோடு தினமும் இரவுகளை கழிக்கும் நாள் நிச்சயம் வரும், நண்பர்களோடு கடற்கரை ஓரத்தில் காத்து வாங்கும் நாளும் நிச்சயம் வரும்.

இனி நாம் எமக்காக பேசுவோம், இலங்கை புலம்பெயர் தொழிலாளர் கூட்டனியை உருவாக்கி இழந்த எங்கள் அபிலாசைகளை அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ள இன்று நாம் புறப்பட்டோம்.நாங்கள் வேண்டி நிற்பதெல்லாம் வாக்குரிமை ஒன்றைத்தான் . அது மட்டும் கிடைத்து விட்டால். எங்களையும் இந்த அரசாங்கம் கொஞ்சம் திரும்பித்தான் பார்க்குமே... எமக்கு தோள்கொடு நண்பா . பலவீனமான இந்த சமூகத்திற்கு வலுச்சேர்ப்போம் வரலாறு உன்னையும் பேசட்டும்.

7 comments:

  1. INDAKARUTTAI ELUZIYA SAHODARARKU ALLAH AWARUDAYA EAKKATTAIYUM ASAIYUM KABOOL SEYWANAHA, NAN INDA KATTURAYAY VASIKKUMPOZU ENAZU KANGALUM IRAMAHINA NANUM VELINATTILTHAN IRUKKUHINDREN.
    INSHA ALLAH NANGAL ELLORUM THAINATTIL POAI KUDUMPETTODU MUYARCHI
    SEYVOM ALLAH KABOOL SEYVANAHA AAMEEN..

    ReplyDelete
  2. This life and experience no body can undestand unless you experience it

    ReplyDelete
  3. Yaa allah tannudayya urawuhalukkaha thiyaham seyyum inda nalla ennam konra anaywarudayya ierulaha walkkaylum rahmaththum barakkaththum seywayaha
    Aameen

    ReplyDelete
  4. there are thousands of RUMAIS s in this deserted land, his voice reveals the hidden sadness and tears of all people who are stranded in the middle east countries, ya allah bless us all with your grace for a prosperous life

    ReplyDelete

Powered by Blogger.