'இது திருடர்களின் கூட்டணி'
தற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் என்பதற்குப் பதிலாக திருடர்களின் கூட்டணி அரசாங்கம் என்றே அழைக்கவேண்டியுள்ளதாக ஜே.வி.பி.நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க விமர்சித்துள்ளார்.
இன்றைய அரசியல் நிலவரம் தொடர்பாக திவயின வார இதழ் ஜே.வி.பி. யின் நிலைப்பாடு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்கவிடம் கருத்துக் கோரியிருந்தது.
அதற்குப் பதிலளித்துள்ள பிமல் ரத்நாயக்க தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும் போது, இன்றைய அரசாங்கம் பெயரளவுக்குத்தான் தேசிய அரசாங்கம். மற்றபடி இது திருடர்களின் கூட்டணி அரசாங்கம். திருடர்களைப் பாதுகாப்பதற்காக கூட்டணி அமைத்துக் கொண்டு செயற்படுகின்றவர்களே அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களாக இருக்கின்றனர்.
மத்திய வங்கி முறைகேடு, அவண்ட்கார்ட் மிதக்கும் ஆயுதக்களஞ்சிய முறைகேடு என்பன போன்ற பாரிய முறைகேட்டுச் சம்பவங்கள் இருதரப்பின் இணக்கப்பாட்டுடன் மூடிமறைக்கப்பட்டுள்ளன.
எனினும் நாங்கள் இதுபோன்ற முறைகேடுகளை மூடிமறைக்க இடமளிக்க மாட்டோம். எதிர்வரும் நாட்களில் பாரியமுறைகேடுகள் தொடர்பில் குரல் எழுப்பவும், பொதுமக்களை தெளிவுபடுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.
நல்லாட்சி குறித்த எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்களுக்கு ஆளும் கூட்டணி துரோகம் செய்தாலும் நாங்கள் அந்த நிலைப்பாட்டில் இருந்து மாறாமல், பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம் என்றும் பிமல் ரத்நாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
Post a Comment