Header Ads



ராஜித்தவின் ஆத்திரம்

கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பான விசாரணைகளை மூடி மறைப்பதற்கு இடமளிக்கப்போவதில்லை என இணை அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன இன்று குறிப்பிட்டார்.

அவர் தெரிவித்ததாவது;

அவன்கார்ட் இல்லை, கோட்டாபய இல்லை, கே.பி இல்லை என சட்ட மாஅதிபர் கூறுகின்றார். அவ்வாறு எனின் சட்ட மாஅதிபரும் இல்லையா என்று தற்போது கேட்க வேண்டியுள்ளது. இதனையே எனது பக்கத்தில் இருந்து நான் கேட்கின்றேன். எனது நிலைப்பாட்டை நான் மாற்றப்போவதில்லை. இது தவறு என நான் அறிவேன். அமைச்சரவையில் நான் நேற்று பேசினேன். என்ன நேர்ந்தாலும் நாம் நிறுத்தப்போவதில்லை. மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவருக்காக செயற்படும் சலுகைகளைப் பெற்றவர்கள் முதல் வரிசைக் கதிரைகளில் உள்ளனர் என்றார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

கே.பிக்கு எதிராக குற்றச்சாட்டு தாக்கல் செய்வதற்கு சாட்சியங்கள் இல்லை என அவருக்கு அறிவித்துள்ளதாக பிரதமர் நேற்று கூறினார். அவருக்கு எதிராக முன்வைப்பதற்கு போதியளவு சாட்சிகள் இல்லை என்றே அதன் பொருளாகும். அதாவது அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் இல்லை என்பது அல்ல. கே.பியை தூய்மைப்படுத்தியுள்ளார்கள் என்பதே அதன் ஊடாக புலப்படுகின்றது. அவன்கார்டுக்கு எதிராக போதியளவு சாட்சியங்க​ள் இல்லையே தவிர வழக்கு இருக்கின்றது என சட்ட மாஅதிபர் கூறியிருக்க வேண்டும். இவ்வாறு நபர்களைத் தூய்மைப்படுத்தும் கருத்துக்களைத் தெரிவித்து, இதனை மக்கள் அறிந்துகொள்ளும் பட்சத்தில், புதிய அரசாங்கமும் பழைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளையே முன்னெடுப்பார்கள் என எண்ணுவார்கள். புதிய அரசாங்கம் தொடர்பில் மக்களுக்கு பாரிய எதிர்பார்ப்புள்ளது.

3 comments:

  1. இவர் உணமியில் விஷயம் தெரியாமல் பெசுகின்றரா? அலல்து மக்களை பேய்க்காட்ட பேசுகின்றாரா?

    ஒன்றுமே நடக்காது என்பதுதான் உண்மை. சும்மா அறிக்கைகள் வரும், பிறகு எதோ சாக்குப் போக்கு நடக்கும். அடுத்த தேர்தல் வரும்பொழுது மீண்டும் வசீம் தாஜுதீனின் ஜனாஸா தோண்டப் படலாம், அவ்வளவுதான்....

    ReplyDelete
  2. Now the Best Drama is going on. Public are observing it day to day. One day the results will out. First the present government must to purify all government institution.

    ReplyDelete
  3. well done sir, we with you....

    ReplyDelete

Powered by Blogger.