Header Ads



ஐக்கிய நாடுகள் சபைக்கு எதிராக, கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் சர்வதேச விசாரணை சட்டவிரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறுகோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
Image caption இலங்கையிடம் ஐ.நா. மன்னிப்புக் கோர வேண்டுமென நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் டாக்டர் குணதாச அமரசேகர இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் பிரதிவாதியாக ஐ.நாவுக்கான இலங்கையின் வதிவிட பிரதிநிதி குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை சட்ட விரோதமானதென்று கூறிய மனுதாரர், இந்த விசாரணைகளில் கருத்துகளை முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அவகாசம் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

எனவே, இந்த விசாரணை ஒரு தலைப்பட்சமானதென்று கூறிய அவர் இதன் முலம் ஐ.நா. அமைப்பு இலங்கை அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பெரிய அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாக இந்த மனு மூலம் குற்றம் சாட்டியுள்ளார்.

சட்ட விரோதமான விசாரணையொன்றை மேற்கொண்டமை சம்பந்தமாக இலங்கை மக்கள் உட்படமனுதாரரிடம் ஐ.நா. அமைப்பு மன்னிப்பு கோரவேண்டுமென்ற உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு இந்த மனு மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. அமைப்பினால் சட்ட ரீதியாக மேற்கொள்ளப் படும் நடவடிக்கைகளுக்கு எதிராக உள்நாட்டு நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல்செய்ய முடியாது.

ஆனால், இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான விசாரணை சட்டத்திற்கு அப்பால்சென்று மேற்கொள்ளப்பட்ட ஒரு விசாரணை என்று கூறிய வழக்கறிஞர் கபில கமகே, அதற்கு எதிராக உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்ய முடியுமென்று கூறினார்

1 comment:

Powered by Blogger.