Header Ads



"தயாசிறியின் லட்சியம்.."

தேசிய அரசாங்கத்தின் செயற்திறன்மிக்க அமைச்சர் என்ற பெயரைப் பெற்றுக் கொள்வதே தனது இலட்சியம் என்று விளையாட்டுத்துறை அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றின் அரசியல் கலந்துரையாட நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் தயாசிறி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கையின் விளையாட்டுத்துறையில் பாரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.

புதியவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும் அதே வேளை விளையாட்டுதுறைகளின் வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் சர்வதேச போட்டிகளில் எமது வீரர், வீராங்கனைகளுக்கு தங்கள் திறமையை வெளிக்காட்ட சந்தர்ப்பம் கிட்டும். 

என்னைப் பொறுத்தவரை நான் வாய்ச்சொல் வீரனல்ல. எந்தவொரு செயலை மேற்கொண்டாலும் சிறப்பான முறையில் பூர்த்தியாக்க முயற்சிப்பவன்.

தேசிய அரசாங்கத்திலும் மிகச் சிறந்த செயற்திறன் மிக்க அமைச்சர் என்ற பாராட்டைப் பெற்றுக்கொள்வதே தனது லட்சியம் என்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.