Header Ads



உலக குடியிருப்பு தினத்தையிட்டு போட்டி நிகழ்ச்சிகள்

உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நாடளாவிய ரீதியில் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளை நடாத்தவுள்ளதாக அவ்வதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்துள்ளார். 

இது சம்பந்தமாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

2015ஆம் ஆண்டுக்கான உலக குடியிருப்பு தினம் எதிர்வரும் அக்டோபர் மாதம் 05ஆம் திகதி யாவருக்கும் திறந்த பூமி எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்படவுள்ளது, இத்தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிhகர சபையானது நாடு பூராகவுமுள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலமான மாணவர்களுக்கிடையில் கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளை நடாத்தவுள்ளது. 

சித்திரப் போட்டியானது தரம் 3 தொடக்கம் 5, தரம் 6 தெடக்கம் 9 மற்றும் 10 தொடக்கம் 13 ஆகிய பிரிவுகளிலும் கட்டுரைப் போட்டியானது தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பிரிவுகளில் தரம் 6 தொடக்கம் 9 மற்றும் 10 தொடக்கம் 13ஆகிய இரு பிரிவுகளாகவும் நடத்தப்படவுள்ளதுடன் வெற்றி பெறுபவர்பகளுக்கு உலக குடியிருப்பு தின பிரதான வைபவத்தின் போது பெறுமதியான பரிசுகளும் வழங்கப்படவுள்ளது. மேலும் ஆக்கங்கள் அனைத்தும் இம்மாதம் 25ஆம் திகதிக்கு முன்னர் பிரதிப் பொது முகாமையாளர் (தகவல் மற்றும் பிரசாரம்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 7வது மாடி கொழும்பு 02 என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்

ஆர்வமுள்ள மாணவர்கள் போட்டியில் கலந்து கொள்வதற்கான விண்ணப்ப படிவங்களை பிரதிப் பொது முகாமையாளர் (தகவல் மற்றும் பிரசாரம்) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 7வது மாடி கொழும்பு 02 என்ற முகவரியில் மற்றும் றறற.nhனய.டம எனும் இணையத்தில் அல்லது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயங்களில் இருந்து பெற்றுக் கொள்ள முடியும் எனவும் மேலதிக உதவிகளுக்கு 2447207 ஃ 2389513 ஆகிய இலக்கங்களுடன் தெடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


ஏம்.ஏ. பாஹிம்
ஊடக உதவி முகாமையாளர்
தே.வீ.அ.அ.ச

2 comments:

  1. அனைவருக்கும் திறந்த இடம் என்றால் வடக்கு மக்களுக்குமா?

    ReplyDelete
  2. இணையத்தள முகவரியை தயவு செய்து குறிப்பிடவும்

    ReplyDelete

Powered by Blogger.