கிழக்கு மாகாணத்தில் பெருநாள் வியாபாரம் சூடுபிடித்தது (படங்கள் இணைப்பு)
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
உலக முஸ்லிம்களின் இரு பெருநாள் தினங்களில் தியாகத்தை வழியுறுத்தும் பெருநாள் தினமான புனித ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜூப் பெருநாளை உலக முஸ்லிம்கள் எதிர்வரும் 24 திகதி வியாழக்கிழமை கொண்டாடவுள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் பெருநாள் வியாபாரம் கலை கட்ட தொடங்கியுள்ளது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு,காத்தான்குடி, ஏறாவூர், வாழைச்சேனை,ஒட்டமாவடி ஆகிய பிரதேசத்திலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை,சாய்ந்தமருது, மருதமுனை,கல்முனைக்குடி, சம்மாந்துறை,நிந்தவூர்,அக்கறைப்பற்று ,பொத்துவில் , ஆகிய பிரதேசத்திலும் திருகோணாமலை மாவட்டத்தில் திருமலை,கிண்ணியா ,மூதூர் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் பெருநாள் ஆடைகளையும்,பெருநாளுக்கு தேவையான பொருட்களையும் கிழக்கு முஸ்லிம்கள் தேடித் தேடித் வாங்கி வருவதால் பெருநாள் வியாபாரம் கலை கட்ட தொடங்கியுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெருநாள் புத்தாடைகளையும்,பாதணிகளையும் வாங்குவதற்காக அதிகமான முஸ்லிம் ஆண்களும்; ,பெண்களும் ஆடை விற்பனை நிலையங்களுக்கும்,பாதணி விற்பனை நிலையங்களுக்கும் செல்வதை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
Post a Comment