நாயினால் கடியுண்டு சிகிச்சை பெறாமலிருந்த, கர்ப்பிணித் தாய் உயிரிழந்தார்
நாயினால் கடியுண்டு சிகிச்சை பெறாமலிருந்து வந்த கர்ப்பிணித் தாய் ஒருவர் திடீர் உபாதைக்குள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமானார்.
பசறை பிரதேச சபை அலுவலகத்தில் ஊழியராக கடமையாற்றி வந்த 25 வயது நிரம்பிய கர்ப்பிணித் தாயே இவ்வாறு மரணமானவராவார்.
ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதி இப்பெண் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளார். எனினும் அவர் தகுந்த சிகிச்சையை பெற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் 19 ஆம் திகதி அக் கர்ப்பிணிப் பெண் திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார். அவரை உடனடியாக பதுளை வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துள்ளார்.
நாய் கடித்து உரிய சிகிச்சை பெறாததாலேயே மரணம் சம்பவித்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment