Header Ads



கடலில் முழ்கி அரபிக்கல்லூரி மாணவன் வபாத்

-ஏ.எஸ்.எம்.யாசீம்-

திருகோணமலை, இறக்ககண்டி காந்தி நகர் கடற்கரையில் விளையாடிக்கொண்டிருந்த நசீர் முகம்மத் ஹாசீர் என்ற 15 வயது சிறுவன், இன்று (19) காலை கடலில் முழ்கி உயிரிழந்துள்ளான் என குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

கண்டியிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலாச் சென்றிருந்த கண்டி, அரபிக்கல்லூரி மாணவர்கள், இன்று (19) கடற்கரையில் பந்து விளையாடிக்கொண்டிருந்த போது, பந்து கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அதை எடுக்க முயற்சித்த போதே குறித்த சிறுவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளான் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.சாதாரண பாடசாலை மாணவர்களும் சுற்றுப்பிரயாணம் மேட்கொல்கிரார்கள் என்று இப்போது அரபு மதரசாக்களும் ஆரம்பித்து விட்டார்கள்.இவ்வலவு தூரம் இம்மாணவன் கேட்பாரற்று கடலுக்குள் போகும் வரை யாரும் கண்டு கொள்ளாதது பெரும் ஆச்சரியம்.பாதுகாவலர்கள் எங்கே போனார்கள்.இவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.சுற்றுப்பிரயாணம் மேற்கொள்வது என்ற பேச்சை ஆரம்பித்து விட்டார்கள் என்றால் அன்று முதல் அந்த மாணவன் பெற்றார்களை பாடாய் படுத்துகிறார்கள் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் பற்றோர்கள் இந்த சுற்றுப்பிரயான சீரழிவால் கடுமையான வெளியில் சொல்ல முடியாத மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றார்கள்.இந்த மாணவனுக்கு கூட்டிச்சென்ற ஒஸ்தாதுகளே(ஆசிரியர்களே பதில் சொல்ல வேண்டும்)

    ReplyDelete
  2. innalillahi wahinnailaihi rajioon
    mr jawfer nothing to do time to call him and he's gone even though he's stay at house he could go

    ReplyDelete
  3. சகோதரர் Musthafa Jawfar அவர்களே, அரபு மத்ரசா மாணவர்கள், என்ன?! உலகத்தை பார்க்காமல் மத்ரசா உள்ளில் மாத்திரம் அடை பட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்றா கூறுகிறீர்கள்? செவ்வியில் பந்து கடலில் வீழ்ந்ததாகவும் எடுக்கப்போன சந்தர்பத்தில் அலை அடித்து இழுத்துச்செல்லப்பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது. "கேட்பாரற்று கடலுக்குள் போகும் வரை யாரும் கண்டு கொள்ளாதது பெரும் ஆச்சரியம்" என்ற உங்களது கூற்று சரி என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் பொறுப்பு தாரிகள் இருந்து தான் இருப்பார்கள். ஆம். தாங்கள் சொல்வது போல் பதில் சொல்லக் கடமைப்பாடு உள்ளவர்கள் அதை செய்யத்தான் வேண்டும். அதற்காக "அரபு மத்ரசா மாணவர்கள் வெளியில் சுற்றுலா சென்று பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்" என்று நீங்கள் அங்கலாய்ப்பது ஏன்? துரதிர்ஷ்டம்.. அதிகமான மத்ரஸாக்களில் மாணவர்களை அடைத்து வைத்துக்கொண்டு உலக அறிவு இல்லாத இழ்மை மாத்திரம் தான் கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்களில் பெரும் பாலானவர்கள் வெளியில் வந்ததும், காணாத உலகைக் கண்டதும் நடக்கும் விபரீதங்கள் பல. அல்லாஹ் அவருக்கு ஷஹீத் அந்தஸ்த்துடன் சுவர்கத்தில் மேலான இடத்தைக் கொடுப்பானாகவும்.

    ReplyDelete
  4. இறக்ககண்டி கடற்கரையில் வபாத்தான அந்த சகோதரரின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து உயர்வான சுவனபதியை கொடுத்தருள்வானாக,,,, ஆமீன்,,,,
    மதரசா மாணவர்கள் டுவர் போவது ஒன்றும் தப்புக்கிடையாது. மாறாக அது ஊக்கிவிக்கப்பட வேண்டிய விடயம். ஆனால் இது சரியான திட்டமிட்ட சிறந்த வழிகாட்டலில் இருக்க வேண்டும்.
    இங்கு இன்னுமொரு வடயத்தை குறிப்பிட்டாக வேண்டும். இறக்ககண்டி நூறு வீதம் முஸ்லிம்களைக் கொண்ட ஒரு அழகான கிராமம். அதன் ஒரு புறம் கடலாலும் இரு புரங்கள் ஆறுகளாலும், ஆற்றைக் கடந்தால் அழகான காடுகளாலும், ஆறும் கடலும் ஒன்றினையும் முகத்துவாரமுமாக இப்படி அழகான அனைவரையும் கவரக்கூடிய அதிக tourist hotel களைக் கொண்ட அற்புதமான ஊர் . இங்குதான் பீஜிங் ஐலண்ட் என்ற புறா மலை beach உண்டு.
    ஆனால் துரதிஷ்டம் ,, இந்த ஊர் மக்களுக்கு இதனால் ஆதாயப்படவும் முடியாமல் , அனுபவிக்கவும் முடியாமல் அரச அதிகாரிகளின் கடும் போக்குக்கு ஆளாகின்றார்கள். கடற்கரை ஓரங்கள் ஹோட்டல்களுக்கு என்று கைப்பற்றுவதால் கடற்றொழில் செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
    முஸ்லிம் காங்கிரசுக்கு அதிக வாக்குகளைக் கொண்ட இந்த ஊர் மக்களை , இலக்சன் வந்தால்தான் முஸ்லிம் காங்கிரஸ் இங்கு சென்று வோட்டு பிச்சை கேட்கிறார்கள். ஏனைய நாட்களில் எட்டிக் கூட பார்ப்பது கிடையாது.
    இவர்களின் பாரிய பிரச்சினையில் உள்ளதுதான்,,,,
    பாடசாலையில் இடம் பற்றாக்குறை
    பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் இல்லாமை.
    கணிதம் விஞ்ஜானம் ஆங்கிலம் பாடங்களுக்கான ஆசிரியர் இல்லாமை
    ஒழுங்கான முறையான பள்ளிவாசல் இல்லாமை
    இருபது வருடங்களாக கட்டப் படும் பள்ளிவாசல் போதிய வசதி இன்மையால் இன்னும் கட்டி முடியாமை.
    கடற்றொழில் செய்ய முடியாமை
    விவசாயம் செய்வதற்கான நிலம் இருந்தும் எந்த ஒரு வசதிகளும் இல்லாமை
    ,,,,,,,,,,,,
    இன்னும் பல ,,, கட்டுரை நீண்டு போவதால் தவிர்க்கப் படுகிது.

    ReplyDelete

Powered by Blogger.