Header Ads



சிரியாவில் காயப்பட்ட நிலையில், பிறந்த குழந்தை (அதிர்ச்சிகர வீடியோ)


சிரியாவில் பிறந்த குழந்தையின் தலையில் குண்டு தாக்குதலில் சிக்கிய உலோக துண்டொன்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

குண்டடிபட்ட தாயின் வயிற்றை கிழித்துக் கொண்டு அந்த கூர்மையான உலோகத் துண்டு கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையை தாக்கியுள்ளது. எனினும் மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் குழந் தையை உயிருடன் மீட்டிருப்பதோடு குழந்தைக்கு எற்பட்டிருக்கும் காயத்திற்கும் சிகிச்சை அளித்துள்ளனர்.

சிரியாவின் அலப்போ நகர மருத்துவ கவுன்ஸில் அதிர்ச்சிதரும் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

மருத்துவர்கள் தாயின் கீழ் வயிற்றை பிரித்துப் பார்த்தபோது தாயின் கருப்பையில் குண்டடிபட்டதால் ஒரு விரல் அளவுக்கு துளை ஏற்பட்டிருந்தது.

பின்னர் மருத்துவர்கள் விரைவில் கருப்பையை திறந்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர். குந் தையின் இடது கண் புருவப் பகுதியில் கூர்மையான உலோகத் துண்டு பாய்ந்துள்ளது.

பின்னர் பல நிமிடங்கள் சிகிச்சைக்கு பின்னரே அந்த பெண் குழந்தை மூச்சுவிட ஆரம்பித்துள்ளது. ஆபாயகராமான முறையில் வாழ்வை ஆரம்பித்திருக் கும் அந்த குழந்தையும் தாயும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிரியாவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் உள்நாட்டு யுத்தத்தில் 200,000க்கும் அதிக மானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். (அதிர்ச்சிகர வீடியோ)


No comments

Powered by Blogger.