Header Ads



"முஸ்லிம் என்ற ஒரு காரணத்திற்காகவே..."

அப்துல் வாஹித் என்ற இளைஞர் 11-07-2006 ஆம் ஆண்டு நடந்த மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டதில் அப்துல் வாஹித் குற்றமற்றவர் என்று விடுதலையாகி உள்ளார். மற்ற 12 பேரும் தினமும் கோர்ட்டுக்கு வருவதும் சிறை தண்டனை அனுபவிப்பதுமாக காலம் ஓடிக் கொண்டிருக்கிறது.

அப்துல் வாஹித் எவ்வாறு இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார் எனபதை அவரிடமிருந்தே கேட்போம்.

'ஜூலை 11 2006 ஆம் ஆண்டு மும்ப்ராவில் உள்ள எனது வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் மும்பையில் நடந்த குண்டு வெடிப்புகளைப் பற்றிய செய்தி வந்து கொண்டிருந்தது. இந்த குண்டு வெடிப்பைக் கண்டு மனம் வேதனையடைந்தது. அன்றைய நாளே எனது சகோதரன் எனக்கு போன் செய்து ' குண்டு வெடிப்பு சம்பந்தமாக உன்னையும் காவல் துறை தேடுகிறது' என்று சொன்னவுடன் அதிர்ந்து விட்டேன். 

'போலீஸ் என்னை இந்த வழக்கில் சேர்ப்பதற்கு நான் (ISLAMIC MOVEMENT OF INDIA) சிமியின் உறுப்பினராக இருந்ததே முழு காரணமாகும். வேறு எந்த காரணமும் இல்லை. 2001 ஆம் ஆண்டு எங்கள் ஊர் பள்ளி வாசலில் ஒரு சிறு பிரச்னை காரணமாக சிலரோடு தகராறு ஏற்பட்டது. அப்போது காவல் துறை அந்த வழக்கில் என்னை கைது செய்தது. அதிலிருந்து நான் கட்டம் கட்டப்பட்டுள்ளேன்.'

'காவல் துறை என்னிடம் பலமுறை 'குற்றத்தை ஒப்புக் கொள். 10 லட்ச ரூபாய் பணம் தருகிறோம். பாலிவுட் சினிமா நடிகையையும் உனக்கு ஏற்பாடு பண்ணி தருகிறோம். மூன்று மாதத்தில் உன்னை குற்றமற்றவன் என்று வெளியாக்கி விடுகிறோம்' என்று கேட்டனர். ஆனால் கடைசி வரை நான் ஒத்துக் கொள்ளவில்லை. செய்யாத குற்றத்துக்கு நான் ஏன் பலி கடா ஆக வேண்டும்?' என்று கேட்கிறார் அப்துல் வாஹித்.

இவர்கள் காவல் துறையினரா? அல்லது பெண்களை கூட்டிக் கொடுக்கும் மாமாக்களா? உலகில் எங்காவது இது போன்ற அநியாயம் நடக்குமா? பொய் வழக்கு ஜோடித்து இவ்வாறு மெடல் வாங்கிக் குத்திக் கொள்வதில் உனக்கு என்ன பெருமை. பொய் வழக்கில் இஸ்லாமியரை சிறையில் அடைத்து அதன் மூலம் கிடைத்த பொருளாதாரத்தை உனது குடும்பத்துக்கு கொண்டு சென்றால் அந்த குடும்பம் விளங்குமா?

இறைவா! முஸ்லிம் என்ற ஒரு காரணத்திற்காகவே இந்த சகோதரனின் வாழ்வை சூன்யமாக்கியவர்களை இந்த உலகிலும் தண்டிப்பாயாக! மறு உலகிலும் தக்க தண்டனையை வழங்குவாயாக! அப்துல் வாஹிதைப் போல் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விசாரணைக் கைதிகளாகவே காலத்தை கழித்து வருகிறார்கள். குற்றமற்றவர்களை விடுதலையாக்கும் நல் ஆட்சியை எங்களுக்கு தந்தருள்வாயாக!

தகவல் உதவி 
மிட் டே.காம
சுவனப் பிரியன் 

No comments

Powered by Blogger.