Header Ads



வெள்ளிக்கிழமை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

-ஜே .எம் .வஸீர்-

முஸ்லிம் சமய விவகாரம்  மற்றும் தபால் சேவைகள்  அமைச்சர் எம்.எச் .ஏ ஹலீம் அவர்கள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அவர்களுக்கு விடுத்த   வேண்டுதலுக்கமைய ஹஜ்ஜு  பெருநாள் முடிந்து மருதினம் அதாவது எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2015.09.25 ஆம் திகதி  நாட்டிலுள்ள  சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும்  விடுமுறை  வழங்க   கல்வி அமைச்சு  தீர்மானித்துள்ளதாக  கல்வி  அமைச்சின்  முஸ்லிம்   பாடசாலைகள் அபிவிருத்திப்பிரிவின்  பணிப்பாளர்  இசெட் .தாஜுதீன்  தெரிவித்தார்.

ஹஜ்ஜுப்பெருநாள் வியாழக்கிழமை வருகின்றமையால் வெள்ளிக்கிழமை முஸ்லிம் பாடசாலைகள் மு.ப 11.30 மணிக்கு முடிவுருவதனால் பாடசாலைகளில் மாணவர்களினதும், ஆசிரியர்களினதும் வருகை மந்தகதியில் காணப்படும் என்பதனாலேயே இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறை வழங்கப்பட்ட தினத்தை ஈடுசெய்துகொள்ளுமுகாமாக எதிர்வரும் 2015.10.03 சனிக்கிழமையான விடுமுறை தினத்தில் பாடசாலை நடாத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு அமைவாகவே  இவ்விடுமுறை  வழங்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான  சுற்று  நிரூபம் மாகான  கல்விப்பணிப்பாளர்கள்  ஊடாக  நாட்டிலுள்ள சகல முஸ்லிம்  பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்  பணிப்பாளர் இசெட் .தாஜுதீன்   மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.