மகிந்த ஆதரவு பெண்களினால், திறக்கப்பட்ட அதிவேக வீதி
கடவத்த- கடுவெல அதிவேக வீதியின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் அந்த வீதியை நாடா வெட்டி திறந்து வைத்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்கள் இருவரும் மஹர பகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மகளிர் அமைப்பை சேர்ந்தவர்களாவர்.
அமைப்பின் தலைவி சுனாமா ஜெயசூரியவும் மற்றும் ஒருபெண்ணுமே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
இதில் ஒரு பெண் நாடாவை வெட்ட மற்றும் ஒரு பெண் தாம் வைத்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உருவப்படத்தை தாங்கிய வண்ணம் பெருமித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
Post a Comment