'அகதிகளுக்காக கண்ணீர் வடிக்கும் மேற்கத்திய நாடுகள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்கின்றன'
மேற்கத்திய நாடுகளின் கொள்கைகள்தான் அகதிகள் பிரச்னைக்கு மூல காரணம் என்று சிரியா அதிபர் அல்-அசாத் கூறினார்.
ஐ.நா.வின் அமைதித் தூதர் சிரியாவுக்கு வரவுள்ள நிலையில் அல்-அசாத் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அவரது கருத்து அடங்கிய செய்திக்குறிப்பை சிரியா அரசு புதன்கிழமை வெளியிட்டது. அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
சிரியாவிலிருந்து பொதுமக்கள் அகதிகளாக வெளியேறுவதற்கு முக்கியக் காரணம் பயங்கரவாதிகள். பயங்கரவாதச் செயல்களின் விளைவாகப் பொதுமக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.
பயங்கரவாதம் தலையெடுக்கும்போது, பொருள்களின் நாசம் செய்யப்படுகின்றன. உள்கட்டமைப்பு அழிக்கப்படுகிறது. வாழ்வாதாரத்துக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் கிடைக்காமல் போகின்றன. இதைத் தொடர்ந்து மக்கள் வெளியேறுகின்றனர்.
வெளியேறும் மக்களுக்காகக் கண்ணீர் வடிக்கும் அதே மேற்கத்திய நாடுகள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்து வருகின்றன.
சிரியாவில் உள்நாட்டுப் பிரச்னை தொடங்கியதிலிருந்து, அது அமைதியான புரட்சி என்று கூறி பயங்கரவாதிகளுக்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
மேற்கத்திய நாடுகளின் கொள்கைகள்தான் அகதிகள் பிரச்னைக்கு மூல காரணம்.
வெளியேறும் பொதுமக்களுக்காக வருத்தப்படுபவர்கள், பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்த வேண்டும் என்று அதிபர் அல்-அசாத் கூறியுள்ளார்.
சிரியா அரசுக்கு எதிராக சண்டையிட்டு வரும் கிளர்ச்சியாளர்களை "பயங்கரவாதிகள்' என்று அதிபர் அல்-அசாத் அரசு குறிப்பிட்டு வருகிறது.
மேலும், மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக் குழுக்களையும் பயங்கரவாதக் குழுக்கள் என்றே அந்த நாட்டு அரசு கூறி வருகிறது.
சிரியாவில் உள்நாட்டுச் சண்டை நடைபெறும் அதே வேளையில், பயங்கரவாத இயக்கமான இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்.) அந்த நாட்டில் கணிசமான பகுதியை ஆக்கிரமித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.
You are very bad king in this century. No body can accept your position in this world. You are the first war criminal.
ReplyDeleteMr.asath even though u r criminal ur words r correct.
ReplyDeleteYou are dhajjal
ReplyDelete