Header Ads



கடிகாரம் கண்டுபிடித்த முஸ்லிம் மாணவனை, வெடிகுண்டு செய்ததாக கைதுசெய்த பொலிஸ்

அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது.

மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் நடந்தது. அகமது முகமது அவரது முழுப்பெயர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்கில் உள்ள மெக் ஆர்த்தர் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட அகமது நாசா அமைப்பின் சின்னம் பொறித்த டி-ஷர்ட்டை விரும்பி அணிபவர். புகழ்பெற்ற எம்.ஐ.டி பல்கலையில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற இலக்கு கொண்டவர். கடந்த சில தினங்களுக்கு முன் அகமது, வீட்டிலேயே உருவாக்கி மின்னணு கடிகாரத்தை பள்ளிக்கு கொண்டு வந்து தனது வகுப்பு ஆசிரியரிடம் மிகுந்த ஆர்வத்துடன் காண்பித்திருக்கிறார். இந்த தொழில்நுட்ப சாகசத்திற்காக ஆசிரியரின் பாராட்டு கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வேண்டும். 

ஆனால், ஒரு சின்ன சூட்கேசில் இருந்த அந்த அமைப்பை பார்த்ததும் பள்ளி ஆசிரியருக்கு சந்தேகம் தான் உண்டானது. இதற்குள் இன்னொரு ஆசிரியர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அன்று மாலையே அகமது கைது செய்யப்பட்டார். பள்ளியில் இருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார். 

அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் வெடிகுண்டாக இருக்கலாம் எனும் சந்தேகமே இதற்கு காரணம். நிச்சயமாக இந்த சந்தேகத்தின் பின்னே அகமதுவின் பெயரும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

14 வயது பள்ளி மாணவர் அறிவியல் ஆர்வத்தை வெளிப்படுத்தியதற்காக பாராட்டி ஊக்குவிக்கப்படுவதற்கு பதில் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்பட்ட சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சம்பவம் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியது.

அகம்து அவரது இஸ்லாமிய மத பின்னணி காரணமாகவே இந்த சந்தேகத்திற்கு இலக்காகி இருக்கிறார் என்பது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த எல்லோரையும் தீவிரவாத கண்ணோட்டத்தில் பார்க்கும் தட்டையான மனநிலையின் வெளிப்பாடாக இந்த சம்பவம் அமைந்திருப்பதாக பலரும் விமர்சித்தனர்.

இந்த கைது பற்றி நாளிதழ்களில் வெளியான செய்தி ,அமெரிக்காவில் நிலவும் சார்பு நிலை பற்றிய விவாதத்தை தீவிரமாக்கியது.

நடந்த சம்பவம் மாணவர் அகமதுவிற்கு அதர்சியாக இருந்திருக்கும். அவரது குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்து நடந்த சம்பவம் குறித்து ஆதங்கத்துடன் விளக்கம் அளித்தனர்.

ஆனால் இதற்குள் அகமதுவுக்கு ஆதரவு குவியத்துவங்கியது. இணையத்தில் பலரும் அகமதுவுக்கு நேர்ந்த கதி குறித்து அதிர்ச்சி தெரிவித்தனர். பள்ளி மாணவனின் ஆர்வத்தை பார்க்காமல் அவனது மத பின்னணியில் கவனம் செலுத்து சந்தேக்கிக்கும் போக்கை பலரும் கடுமையாக குறை கூறினர். இந்த நிலைக்கு இலக்கான அப்பாவி மாணவர் அகமதுவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் வகையில் #IStandWithAhmed எனும் ஹாஷ்டேகை உருவாக்கி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். இணையவாசிகள் மட்டும் அல்லாமல் விஞ்ஞானிகள் உள்ளிட்டோரும் இந்த ஹாஷ்டேகுடன் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இளம் கண்டுபிடிப்பாளராக அகமதுவை ஊக்குவிப்பதற்கு பதில் ஒரு பள்ளி மாணவரை தீவிரவாதியாக பார்ப்பது சரியா எனும் விதமாக பலரும் கேள்வி எழுப்பினர். வெள்ளை மாணவர் ஒருவர் இது போல செய்திருந்தால் பாராட்டி இருப்பீர்கள் அல்லவா என்பது போலவும் சிலர் ஆவேசமாக கேட்டிருந்தனர்.

டிவிட்டர் உள்ளிட்ட சமூக தளங்களில் இப்படி ஆதரவு குவிந்த நிலையில். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஒபாமா தனது டிவிட்டர் பக்கத்தில் , அகமதுவின் கடிகார கண்டுபிடிப்பை பாராட்டியுள்ளதோடு வெள்ளை மாளிகைக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 

அதே போல பேஸ்புக் நிறுவனம் மார்க் ஜக்கர்பர்கும், மாணவர் அகமதுவுக்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக் நிறுவன தலைமையகத்தில அவரை வரவேற்க தயராக இருப்பதாக கூறியிருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் அக்மதுவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதரவு பெருகி வருகிறது. 

இப்படி பெருகும் ஆதரவு மாணவர் அகமதுவை ஹிரோவாக்கி இருக்கிறது. நிச்சயம் இந்த ஆதரவையும் அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் இணையம் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்து புகழையும் தேடித்தந்திருக்கிறது. அகமது குடும்பத்தினர் இந்த நிகழ்வு தொடர்பாக @IStandWithAhmed எனும் பெயரில் டிவிட்டர் கணக்கு துவங்கி இந்த நிகழ்வை பதிவு செய்து வருகின்றனர்.

- சைபர்சிம்மன்


18 comments:

  1. Most of Americans are living with phobia And panic at present world

    ReplyDelete
  2. i don't know how a bunch of donkeys end up running a school in america.

    ReplyDelete
  3. முஸ்லிம் என்றாலே பயங்கரவாதிகள் என்கின்ற பிம்பத்தை ஏற்படுத்து விட்டார்கள். ஒரு காலத்தில் தெமல (தமிழன்) என்றால் கொட்டியா (புலி) என்றுதான் நினைத்தார்கள்.

    இப்பொழுது உலகம் முழுவதும் முஸ்லிம் என்றால் புலி என்று நினைக்கின்றார்கள். இதற்கு யார் காரணம், ISIS, அழ கைதா, போகோ ஹராம், அல் சபாப் போன்றவர்களே முக்கிய காரணம்.

    இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்க இவர்களும், இந்த நாட்டில் இருக்கும் சுயநல இஸ்லாமிய இயக்கங்களும் போதும்.

    ReplyDelete
  4. திருத்தம் : இப்பொழுது உலகம் முழுவதும் முஸ்லிம் என்றால் "பயங்கரவாதி" என்றுதான் நினைக்கின்றார்கள்.

    ReplyDelete
  5. மேற்கு நாடுகளில் மிக மோசமான நிறவெறி அமைப்பே உள்ளது.ஆனால் அல்லாஹ்அதன் மூலம் அகமதுவுக்கு யாரும் எதிர் பர்த்திராத அளவு புகழயும் துறைசார் நிபுணர்களின் அறிமுகத்தையும் கொடுத்துள்ளான்.இனி அல்லாஹ்வின் அருளுடன் அமேரிக்காவின் அடுத்த அப்துல் கலாம் ஆக வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  7. They spend billions of dollars manufacturing Islamophobia; But innocent kids like Ailan Kurdhi and Ahmad Cool combat them by conquering the hearts and minds of masses world-over, It was the WILL of Al-mighty God.

    ReplyDelete
  8. Kadaisila enna senjanu sollama poittingalay

    ReplyDelete
  9. I think,this unexpected incident happened to this student,as he is lucky enough why because of his popularity , meantime he will be released as American justice is considerably ok.

    ReplyDelete
  10. Allah will guide him very clever and safe him always

    ReplyDelete
  11. அமரிக்காவில் நடந்த ஒரு விடயத்தை வைத்து பின்னூட்டம் எழுத வேண்டிய சில மூளை கெட்டவர்கள் சம்மந்தமில்லாமல் உலமாசபையையும் தவ்ஹீத்வாதிகளையும் வம்புக்கிழுத்து மார்கத்தை கேவலப்படுத்தும் la voix போன்ற இஸ்லாமிய அறிவு இல்லாதவர்களின் பின்னூட்டங்களை jaffnamuslim தவிக்க வேண்டும் இவர்களின் பின்னூட்டங்கள் மிகவும் கேவலமாக இருக்கிறது.இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.இவர்கள் யாரடைய கூலிப்படை என்பது தெரியவில்லை.தயவு செய்துஇவரின் கருத்துக்களை தடை செய்யுங்கள்.தொடர்ந்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறை கூறிக்கொண்டு இருக்கிறார்கள் .

    ReplyDelete
  12. Muslims are responsible for this situations

    ReplyDelete
  13. ஜப்னா முஸ்லிம் mustafa jawfer என்கின்றவருக்கு அடிமையாகி விட்டதா?

    அனைவருக்கும் அவர்களது உரிமைகளை வழங்குங்கள். ஒருவரது கருத்து பிடிக்கவில்லை, அல்லது தனக்கு சம்பளம் தரும் எஜமானுக்கு எதிராக உள்ளது என்றால், அதற்கு மாற்றுக் கருத்து பதியலாமே தவிர, மற்றவரின் கருத்தை நீக்கும்படி ஒரு ஊடகத்தை பயங்காட்டிப் பணிய வைப்பது நியாயமானது அல்ல.

    ஜப்னா முஸ்லிம் ஒரு சிலரின் கருத்துக்களை கேட்டு அவர்களுக்கு அடிமை ஆகக் கூடாது.

    ReplyDelete
  14. அடுத்தவனின் கருத்தை நீக்கு என்று அடம் பிடிப்பது சுத்த அநாகரீகம்.

    ஜப்னா முஸ்லிம் இதுபோன்ற மிரட்டல்களுக்கு அடிபணியக் கூடாது.
    கருத்து தவறு என்றால், என்ன தவறு என்று சுட்டிக் காட்ட வேண்டும். வாசகர்கள் மடையர்கள் அல்ல, அவர்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள், புரிந்து கொள்வார்கள்.

    ஜப்னா முஸ்லிம் சிறப்பாக செயற்பட ஆரம்பித்து இருக்கும் நிலையில், சிலர் ஒரு பக்க சார்பான இணையத்தளமாக மாற்றி, அதனை கவிழ்க்க முயல்கின்றனர்.

    ஜப்னா முஸ்லிம் இலங்கையில் தடை செய்யப்படும் வரை நான் கருத்து பதிந்து வந்தேன், இதே பெயரிலேயே. ஆகவே ஜப்னா ம்சுலிம் அதனை கருத்தில் கொள்ள வேண்டும்.

    நன்றி.

    ReplyDelete
  15. முஸ்லிமை உலகம் முழுவதும் பயங்கரவாதியாக பார்க்கிறார்கள், அது பெரிய அநியாயம், அதற்கு நமது பங்கும் உண்டு.

    9/11 நடந்த பொழுது பல முஸ்லிம்கள் மகிழ்ச்சியை வேளிக்கட்டினார்கள், உசாமா பின் லாடனை ஒரு ஹீரோ போன்று கருதினார்கள். லிபியாவில் அமெரிக்க தூதர் கொலை செய்யபப்ட்டதை பார்த்து சிரித்து சந்தோசப் பட்டார்கள், தலிபானை இஸ்லாம் என்றார்கள், இப்பொழுது அதெல்லாம் ரிட்டர்ன் வருகின்றது.

    ReplyDelete
  16. mustafa Jawfer எழுதுவதை பார்த்தாலும் முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்பதை நிருபிக்கிற மாதிரித்தான் இருக்கு. முதலில் இவர் திருந்த வேண்டும். பிறகு உலகத்தை திருத்தலாம்.

    ReplyDelete
  17. தாம் கண்தூகிக்கும் கபுறு வணங்குவதர்க்கும் பத்து சதத்துக்கு பாத்தியா ஓத முடியவில்லை என்பதற்காக மற்றவர்களை குறை கூறி சரி வருமா கபுறு வணங்கிகளே.இதில் ஒரு கட்டுரை வந்தது அல்லாஹ் சாட்சி வைத்து சொல்கிறேன் என்ற தலைப்பில் சீதனம் கைக்கூலி பற்றி நல்ல அழகான குத்திக்காட்டலோடு இதற்க்கு இந்த சமுக சேவகர்களின் பின்னூட்டம் எங்கே.வாய் அடைத்து விட்டதா அல்லது வைக்குள் முட்டையா.சீதனம் என்ற பெயரில் பிச்சை கேட்டு தட்டிப்பறிக்கும் மூதேவிகளுக்கு எதிராக ஒரு பின்னூட்டம் எழுதி இருக்கலாம் அல்லவா?எங்கே மூளை உள்ள வாசகர்கள்?

    ReplyDelete
  18. கருத்து பிடிக்கவில்லை என்பதற்காக ஒரு முஸ்லிமை பார்த்து கபுறு வணங்கி என்று கேவலமாக பேசும் அறிவீனர்கள் எல்லாம் மக்களுக்கு அறிவுரை சொல்லும் பெரிய அறிஞர்கள் போன்று நடிப்பது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றோ?

    எங்கே கருத்து எழுத வேண்டும், எங்கே எழுதத் தேவையில்லை என்பது ஒவ்வொரு வாசகநினதும் தனிப்பட்ட சுந்தந்திரம், அதில் யாரும் தலையிட முடியாது.
    இங்கே கொமன்ட் எழுதவில்லை என்று சந்தியில் வந்து அழுவது, மொண்டசூரி சின்னப் பிள்ளைகளின் செயல் போன்றது.

    ஒரு நாளைக்கு எத்தனையோ செய்திகள் வருகின்றன, எல்லாவற்றிற்கும் எல்லோரும் பின்னூட்டம் இடுவதில்லை. இந்த பொது அறிவு கூட இல்லாதவர்கள், சவுதியின் வரலாற்றை எங்கே தெரிந்து இருக்கப் போகின்றார்கள்?

    ReplyDelete

Powered by Blogger.