Header Ads



'இலங்கையில் மரண தண்டனை, மீண்டும் அமுல்' - எதிர்வாதங்களும் தொடருகிறது

அண்மைக்காலமாக இடம்பெற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் உள்ளிட்ட காரணங்களால், நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுலாக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இது சார்ந்த கருத்தை வெளியிட்டிருந்தார். 

நாடளுமன்றம் அங்கீகரிக்குமாக இருந்தால், அடுத்த வருடம் முதல் மரண தண்டனையை அமுலாக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி கூறி இருந்தார்.

எனினும் மரண தண்டனையின் மீளமுலாக்களுக்கு மனித உரிமை செயற்;பாட்டாளர்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். 

இது கடுமையான மனித உரிமை மீறல் என்று சட்டத்தரணி பிரதீபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். 

அதேநேரம் மரண தண்டனைகள் குற்றச் செயல்களை குறைக்கும் என்றாலும், குற்றங்களை குறைப்பதற்கான இறுதி வழி இதுவாக அமையாது என்று களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லக்ஸ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார். 

2 comments:

  1. இவ்வாறே கொலைகாரர்களுக்கும் குடுக்காரர்களுக்கும் வக்காலத்து வாங்கும் சட்ட வல்லுனர்கள் இருக்கும் வரை அப்பாவி மக்கள் இலங்கையில் வாழ்வது கஷ்டம்தான்.இவர்களின் மகள்கள் இவ்வாறு செய்யப்படும் வரை இஅவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.சுதந்திர நாடு ஏற்று சொல்கிறீர்கள் எங்கே சுதந்திரம் இருக்கிறது.பெண்கள் நடமாட முடியாது சிறுவர்கள் நடமாட முடியாது ஏன் ஆண்கள் கூட சில வேளைகளில் நடமாட முடியாதுள்ளது இதற்க்குபோய் சுதந்திர நாடு பேருவேற.சுதந்திரம் என்றால் உடல் பாதி தெரியும் விதமாக தான் நினைத்த கிழிந்த சட்டையை ஆண்களும் பெண்களும் போட்டுக்கொண்டு அநாகரிகமாக திரிவதா?அல்லது சுதந்திரமாக சாராயம் கசிப்பு போதைப்பொருள் உட்கொள்வதா?படித்த முட்டாளும் படியாத முட்டாளும் ஒரே கருத்தை சொன்னால் நாடு எவ்வாறு உருப்படும்.

    ReplyDelete
  2. இது அவன்ட அவன்ட புள்ளைக்கு நடந்தாத்தான் தெரியும் மனித உரிமை என்ற போர்வையில் மிருகங்களை பதவிக்கு வைத்தால் இப்படி அறிக்கை மட்டும் தான் விடும் ஒழுங்கானவர்களை பதவியில் வைத்தால் தவறுகள் குறைவடையும்.

    ReplyDelete

Powered by Blogger.