Header Ads



ஜெனிவா அறிக்கை தொடர்பில், நன்கு ஆய்வு செய்கிறாராம் மகிந்த ராஜபக்ச

ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை தொடர்பில் நன்கு ஆய்வு செய்த பின்னரே ஏதேனும் கருத்து வெளியிட முடியும் என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜா-எல பிரதேசத்தில் இறுதி சடங்கொன்றில் கலந்துகொண்டதனை தொடர்ந்து ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நான் நன்கு அவதானத்துடன் பார்த்துகொண்டுள்ளேன். 

எனக்கு எதிராக பலவிதமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன, நிறைய திட்டங்களுக்கு பணத்தை வீண் செலவு செய்து விட்டதாக இன்று பாதைகளை பார்க்கும் போது தெரிகின்றது அவை எவ்வாறென்று.

நான் ஆரம்பித்த திட்டங்களை தற்போதைய அரசாங்கம் திறந்து வைக்கின்றது அதனை பார்க்கும் போது மகிழ்ச்சியாகவே உள்ளன, நாங்களை ஒன்றை நிர்மாணிப்பது வெறுமனமே மூடி வைத்து விடுவதற்கல்ல, அதனை திறந்து வைத்து மக்களுக்கு பிரயோசனமாக முறையில் பயன்படுத்த வழங்க வேண்டும்.

அத்துடன் ஜெனிவா அறிக்கை தொடர்பில் நன்கு ஆய்வு செய்த பின்னர் நிச்சியமாக அது தொடர்பில் கருத்து வெளியிடுவேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. மைத்திரி ஜனாதிபதியாக இருப்பது உன் தலை எழுத்து நல்லம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  2. My3 group will inject on time.not to worry.time been MR will. . , . , , . . . .

    ReplyDelete

Powered by Blogger.