Header Ads



''மரண தண்டனை வழங்க மைத்திரி விரும்பினால், பாராளுமன்ற அனுமதி அவசியமில்லை''

குழந்தைகள் சித்திரவதை உள்ளிட்ட கடுமையான குற்றங்களுக்காக மரண தண்டனையை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பது இதுவரையில் சமூக பேச்சுவார்த்தையாக உள்ளன.

மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு ஆட்சேபனைகள் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். எனினும் அதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை கோருவதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் சிங்கள ஊடகமொன்று, பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேராவிடம் வினவியது.

அதற்கு மரண தண்டனை அமுல்படுத்துவதன் மூலம் குற்றங்களை தடுக்க முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்படியிருப்பினும் மரண தண்டனை வழங்குவதற்கு ஜனாதிபதி விரும்பினால் நாடாளுமன்றத்தின் அனுமதி அவசியமில்லை அதற்கான அனைத்து அதிகாரமும் ஜனாதிபதியிடம் உள்ளதாக பிரதி அமைச்சர் அஜித் பீ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய மரண தண்டனை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதியின் அனுமதி கிடைத்தால் அதனை எதிர்வரும் வாரம் முதல் செயற்படுத்தப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களை, 10 பேராக மூன்று மாதங்களுக்கு அனைவருக்கும் தண்டனை வழங்கிவிட முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மரண தண்டனையை அமுல்படுத்துவதன் மூலம் மாத்திரம் தவறுகளை தடுத்து விட முடியாதென மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா சிங்கள ஊடகமொன்றுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.