கல்முனையில் சர்வதேச, சமாதான தின நிகழ்வுகள்
'ஒவ்வொரு மனிதனும் மனச்சாட்சிப்படி செயற்படுவார்களேயானால் இந்த உலகில் சமாதானம் மலர்ந்துவிடும். மாணவர்களாகிய நீங்களே நாளைய சந்ததியினர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இல்லங்களிலும், உறவினர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் சமாதானத்திற்கான இந்த செய்தியை கூற வேண்டும். சமாதானத்தை நிலைநாட்டுவதற்காக நீங்களனைவரும் இப்பணியிலே ஈடுபடுங்கள்" என போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை ராஜாங்க அமைச்சர் பைசால் காசீம் தெரிவித்தார்.
கல்முனை கல்வி வலயத்தின் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள், இன்று திங்கட்கிழமை (21.09. 2015) நிந்தவூர் அல் மஷ்கர் பெண்கள் உயர்தர பாடசாலையில் நடைபெற்றபோதே, பிரதம அதிதியாக இந்நிகழ்வில் பங்கேற்ற பைசால் காசீம் இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் SM ஜலீல் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களுக்கு ஊக்குவிப்பு பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், கல்முனை கல்வி வலயம் அமைச்சருக்கு நினைவுப்படிகம் ஒன்றும் வழங்கப்பட்டது.
Post a Comment