Header Ads



"ஏ.ஆர்.ரஹ்மான் இந்து சமயத்திற்கு, திரும்புவதற்கான நேரம் இதுவே" - விஸ்வ இந்து பரிஷத்

இரானிய இயக்குநர் மஜித் மஜிதியின் இயக்கத்தில் 'முகம்மது: மெசஞ்சர் ஆஃப் காட்' என்ற திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகியது. இது இஸ்லாமிய மக்களின் மனதை புண்படுத்துவதாகக் கூறி, மும்பையைச் சேர்ந்த ராஸா அமைப்பு, அந்தப் படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் உட்பட பலருக்கு எதிராக ஃபத்வா விதித்தது.

இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான், “நன்னம்பிக்கையில்தான் இசையமைத்தேன்” என்று பதில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 'தாய்மதத்துக்கு திரும்புவதற்கான நேரம் இதுவே' அதாவது அவரது ‘கர்-வாப்ஸி’க்கு உகந்த நேரம் இதுவே என்று விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கூறியுள்ளது.

வி.எச்.பி. இணை பொதுச் செயலர் சுரேந்திர ஜெயின் இதுகுறித்து கூறும்போது, “ரஹ்மானுக்கு எதிரான ஃபத்வா அறிவிப்பு துரதிர்ஷ்டவசமானது, இதைவிடவும் துரதிர்ஷ்டவசமானது அதில் உள்ள பழிதீர்ப்பு மொழி.. அவர் அந்தப் படத்துக்கு இசை அமைத்திருப்பது மதம் தொடர்பானது அல்ல.

எனவே, நான் ரஹ்மானிடம் முறையிடுவது என்னவெனில், அவர் திரும்ப வேண்டும், கர்-வாப்ஸி செய்ய வேண்டும். இந்து சமூகம் தனது புதல்வனின் வருகைக்காக காத்திருக்கிறது. நீட்டிய கைகளுடன் அவரை வரவேற்கிறோம் என்பதுடன் எவ்வளவு பத்வாக்கள் அவருக்கு எதிராக அறிவிக்கப்பட்டாலும் அவருக்கு எந்த வித தீங்கும் ஏற்படாது என்பதையும் உறுதி செய்கிறோம்” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

21 comments:

  1. நனையும் ஆட்டில் குளிர்காய நினைக்கும் ஓநாய்கள்!

    ReplyDelete
  2. இவர் உண்மையான மார்க்கம் இஸ்லாம் என்று வந்திருந்தால் இவரை யாராலும் அசைக்க முடியாது.இஸ்லாத்தில் வாழும்போது பல சோதனைகள் வரத்தான் செய்யும்.இவர் இந்துவாக இருந்தால் இவருக்கு யாரும் பத்வா கொடுக்க மாட்டார்கள் அதைப்பற்றி யாரும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள் இவர் முஸ்லிம் என்ற காரணத்தால்தான் உரிமையோடு சகோதர முஸ்லிம் என்ற வகையில் பத்வா வழங்கப்படுகிறது .பொதுவாக இவர் ஒரு பூரண முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற நல்லன்னமே தவிர வேறு ஒன்றும் இல்லை.இதை விஷ்வ இந்து பர்ஷத் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.அவர் ஒரு முஸ்லிம் அவரின் தப்புத்தவருகளை சுட்டிக்காட்டும் உரிமை சகலமுச்ளிம்களுக்கும் உண்டு அதேபோல் மற்ற முஸ்லிமின் குறைகளை சுட்டிக்காட்டும் உரிமை ரகுமானுக்கும் உண்டு என்பதை இந்து முன்னணிகள் புரிந்தது கொள்ள வேண்டும்

    ReplyDelete
  3. எல்லாமே ஹராம் ஹராம் என்று மனிடஹ்னை வாழ விட முடியாத அளவுக்கு ஆக்ரோசமாக பத்வாக்களை அள்ளி வீசினால், வெளியில் இருப்பவர்கள் இப்படி எதிர்பார்ப்பதை நம்மால் தடுக்க முடியாது.

    இதன் பிறகாவது பத்வா வியாபாரிகள் வாயைப் பொத்திக்கொண்டு, மனிதனை நிம்மதியாக வாழ விடட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அல்லாஹ்வை பயந்துக்கொள்ளுங்கள்

      Delete
  4. Ippa matum enna kabrukali vanangi kondu thrihiran

    ReplyDelete
  5. mustafa jaufer, சப்பைக் கட்டுக் கட்ட வேண்டாம்.
    இஸ்லாத்தில் வருகின்ற சோதனை வேறு, இஸ்லாத்தில் உள்ளே இருந்துகொண்டு கொடுக்கின்ற mental torture வேறு, வித்தியாசம் தெரியாமல் பேச வேண்டாம்.

    சகோதர முஸ்லிம் என்கின்ற நல்லெண்ணமும், உரிமையும் இருந்தால், அதனை சொல்ல ஒரு அழகான முறையை இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது. அதற்குப் பெயர் பத்வா அல்ல.

    உங்கள் அன்புத் தந்தையிடம் ஒரு குறியாய், தவறைக் கண்டால், அவரிடம் நேரடியாகவோ, தாயார் மூலமோ சொல்லி தனிப்பட்ட முறையில் திருத்த முயற்சி செய்வீர்களா? அல்லது வெள்ளிக்கிழமை ஜும்மவிட்குப் பிறகு வாப்பாவின் பெயருடன் பள்ளிவாசலில் ஸ்பீக்கரில் அறிவிப்பு செய்வீர்களா?

    தயவுசெய்து பத்வா வியாபாரிகளுக்காக வீணாக வக்காலத்து வாங்க வேண்டாம், நீங்கள் இப்படி செய்தால் இந்த பத்வா வியாபாரிகள் திருந்தவும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

    ReplyDelete
  6. இசை ஹராம், அது ஹராம், இது ஹராம் என்று குர்ஆனில் சொல்லப்படாத விடயங்களை எல்லாம் ஊதிப் பெருப்பித்து நொட்டை பிடித்துக் கொண்டு இருக்காமல், மனிதர்களை இயல்பாக வாழ விடுங்கள்.

    இசை ஹராம் என்று பிடிவாதம் பிடிப்பதை நிறுத்துங்கள். முஸ்லிம்களை முஸ்லிம் என்கின்ற கெளரவத்துடன் வாழ விடுங்கள். அது ஹராம், இது ஹராம் என்று சொல்லி, முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் விரட்டும் வேலையை நிறுத்துங்கள்

    மூலைக்கு மூலை முளைத்திருக்கும் பத்வா கடைகளை மூடிவிட்டு, மார்க்கத்திற்கும், மனிதர்களுக்கும் நலல்வையை செய்ய முயலுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. குர்ஆனில் எல்லாமே சொல்லப்பட்டிருக்கு பார்பவருக்கு புரியும்.

      Delete
    2. குர்ஆனில் எல்லாமே சொல்லப்பட்டிருக்கு பார்பவருக்கு புரியும்.

      Delete
    3. இசை கேட்பதால் நிபாக் எனும் நயவஞ்சகத்தனம் உள்ளத்தில் உருவாகும் மழை பெய்தவுடன் புல் பூண்டுகள் எவ்வாறு வளர்கின்றதோ அதைப்போன்று உள்ளத்தில் நிபாக் எனும் நயவஞ்சகத்தனம் உருவாகும் இஸ்லாத்தில் இசை என்பது தடுக்கப்பட்ட ஒரு விடயம் இஸ்லாத்தைப்பற்றி பேசும்போது கொஞ்சம் சிந்தித்து பேசவும் இஸ்லாம் ஒன்றும் அரசியல் பேசுவது போல இல்லை கண்டவர்கள் எல்லோரும் நினைத்த மாதிரி பேசுவதற்க்கு மந்தை என்றால் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டும் இல்லாவிடில் இதைப்போன்ற ஓநாய்கள் அடித்துக்கொன்று உண்டுவிடும்

      Delete
  7. This is why others hate Islam and they hesitate to convert to Islam, present Muslims are not prepared to accommodate others, Non Muslims love Islam because of Islamic principles and our prophet Rasoolullah, they hate Islam because of present Muslim ummah who own this religion, this Muslims think this is their ownership, no other religious people should touch it? If we go to other countries there are more non Muslims now read the Holly Quran to understand its uniqueness and come to Islam, not because of so called Dawwa and Fathwa

    ReplyDelete
  8. ஒரு இஸ்லாமியனும்,இஸ்லாத்தைப் பற்றி[ புரிந்தவனும் la voix போலவும் yaseer sameem போலவும் கருத்து சொல்லமாட்டார்கள்.

    ReplyDelete
  9. சகோ.யாசீர் நீங்க லூசா

    ReplyDelete
  10. LA VOIX. OLUNGANA MUSLIM ISLAM MAARKATHAI VITTU VERU MATHATHUKKU SELLAMAATAN. ENNA VAHAYANA PATHWA VALANGINALUM SARI. HARAM EPPOTHUM HARAMTHAN. MANITHARHALI SUYAMAHA VAALA VIDUVATHENRAL ISLAM MATHAM THEVAI ILLAI.

    ReplyDelete
  11. பத்வா என்பது கதைப்புத்தகம் வாசித்துவிட்டு கொடுக்கும் விடயமல்ல அது குர்ஆன் ஹதீஸ் நபி காட்டிய வழி முறையின் அடிப்படையில் கொடுக்க கூடிய ஒரு முடிவு இதைப்பற்றி தவறாக நினைக்க வேண்டாம்

    ReplyDelete
  12. La voix & yaseer...they want to comment in any without any propper knowledge...
    So, please Jaffnamuslim.com should take care of this kind of behaviour people and not publish foolish comments...Pls

    ReplyDelete
  13. Clark Moon ஏற்கனவே சவுதிக்கு வக்காலத்து வாங்கி, நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்ட கவலையில் இங்கே வந்து புலம்புகின்றார்.

    இசை நிபாக் தனத்தை கொண்டுவரும் என்றால், அந்த குர்ஆண் ஆயாத் எங்கே?

    எந்த சூராவில் உள்ளது, எத்தநியவது வசனம்?
    இசை உள்ளத்தில் அபப்டி செய்யும் என்றால், உலகில் உள்ள 99% மக்கள் / முஸ்லிம்கள் அப்படித்தான் இருக்க போகின்றார்கள், இசை இல்லாமல் உலகம் இல்லை.

    பயணிக்கும் வாகங்கள், போகும் ஷாப்பிங் கடைகள் என்று எல்லா இடமுமே இசை உள்ளதே.

    ReplyDelete
  14. பத்வா என்பது இருக்கின்ற முஸ்லிம்களையும் இஸ்லாத்தை விட்டு துரத்துவதாக உள்ளது.

    அது ஹராம், இது ஹராம் என்று இன்னும் எத்தனை காலதிற்குத்தான் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டப் போகின்றீர்களோ?

    இசை ஹராம் என்பது இஸ்லாத்தின் ஒரு முக்கிய அம்சமாக இல்லை எனபதை எவ்வளவு சொன்னாலும் புரிந்துகொள்ளாதது போன்று நடிக்கின்றார்கள். இப்படித்தான் ஒரு காலத்தின் ஆங்கிலம் படிப்பது ஹராம் என்று சொன்னார்கள்.

    அடுத்தவனுக்கு மட்டும் ஹராம் பத்வா கொடுக்கும் புனிதர்கள் தான் இந்த சமூகத்தில் அதிகமாக உள்ளனர்.

    ReplyDelete
  15. Majority is not importen brother

    ReplyDelete
  16. இஸ்லாதுக்கு எந்த இழிவும் இல்லையே.

    ReplyDelete
  17. இஸ்லாத்தை இழிவு படுத்த இப்படியான புத்தி சாதுரியமற்ற பத்வாக்கள் காரணமாக அமைந்து விடுகின்றன.

    ReplyDelete

Powered by Blogger.